பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திண்ணைப் பள்ளி நிகழ்ச்சிகள் 33 குமிழிகளில் எழவில்லை! பள்ளிக் கூடத்தில் நாடோறும் பிற்பகலில் கோலாட்ட ஒத்திகை நடைபெறும். இங்கும் நான்தான் கோலாட்டப் பாட்டுகளைத் தொடங்குவேன். சிறுவர்கள் என்னைப் பின்பற்றிச் சொல்லிக் கொண்டே கோலாட்டம் நடைபெறும். ஆட்டமும் பாட்டமும்" அற்புதமாக நடைபெறும். இந்த விளையாட்டுமுறைக் கல்வி அற்புதமானது. உடற்பயிற்சியும் உள்ளப் பயிற்சியும் கலந்த இம்முறையால் சிறுவர்களின் மனத்திற்குக் களிப்பும் மகிழ்ச்சி யும் ஊற்றெடுக்கும், அக்காலத்தில் பின்னல் கோலாட்டம் என்ற வகை தான் இந்தக் கோலாட்ட விளையாட்டில் சிகரமாக விளங்கியது. மஞ்சள், சிவப்பு, ஊதா, பச்சை, வெள்ளை என்ற நிறங்களில் ஐந்து இணைக்கயிறுகள் (பத்து) ஒரு மரக்கட்டையாலான வட்ட அமைப்பில் தொங்கவிடப் பெற்றிருக்கும். இந்த அமைப்பைக் கூரையின் மேட்டு வளைவில் தொங்க விடுவார்கள். பக்கத்திற்கு ஐந்து பேர் வீதம் பத்துப் பேர்கள் இந்த ஆட்டத்தில் பங்கு பெறுவர். ஒவ்வொரு வண்ணக் கயிறும் எதிர் எதிராக இருக்குமாறு அமைத்துக் கொண்டு கயிற்றில் ஒரு கோலாட்டக் கழியைக் கட்டிக் கொண்டு மற்றொரு கழியால் ஒலியை எழுப்புவார் கள். இந்த ஆட்டத்திலும் பலவகைப் பாடல்கள் பங்குபெறும் பா ல ர் க ட் கு ப் பா ட ல் க ள் "தண்ணிபட்டபாடு' . எல்லோருக்கும் பாடல்கள் நன்கு தெரியும்; எல்லாம் மனப்பாடம், இந்த ஆட்டத்திலும் நான்தான் பாடல்களைத் தொடங்குவேன். சிறுவர்கள் என்னைப் பின்பற்றிச் சொல்லிக் கொண்டே ஆட்டம் நடைபெறும். பாட்டைச் சொல்லிக் கொண்டே பாட்டிற்கேற்றவாறு கோல் ஒலியை எழுப்பிக் கொண்டே இணை இணையாகச் சிறுவர்கள் - 9. இக்காலத்தார் கூறும் ஆட்டப்பாடல்கள் (Action songs) இவற்றையொத்தவையே.