பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திண்ணைப் பள்ளி நிகழ்ச்சிகள் 37 கவராத்திரி விழாவின் ஒன்பது நாளும் பள்ளியில் படிக்கும் சிறுவர்களின் வீடுதோறும் கோலாட்டம் நடைபெறும். முன்னதாகவே பெற்றோர்களிடம் நாளை உறுதி செய்து கொண்டு அந்தந்த வீடுகளுக்குச் செல்வோம். தெரு வழியாக வீடுவீடாகச் செல்லும்போது கோல்களைத் தட்டிக் கொண்டே பாட்டுகள் பாடிக் கொண்டே செல்வோம். ஊர் மக்கள் எங்களைப் பார்க்கப் பார்க்க எங்களுக்கு உற்சாகம் மிகும். பெருமிதத்துடன் நடந்து செல்வோம். அந்தந்த வீட்டுச் சிறுவர்கள் தம் வீட்டில் கோலாட்டம் அடிக்கும் போது மிக உற்சாகமாக அடிப்பர். தம் செல்வங்கள் நன்றாகக் கோல் போடுவதைப் பார்த்துப் பெற்றோர்களும் பெரியோர்களும் மிகவும் மகிழ்ச்சி அடைவர். ஆசிரியர்க்கு ஒரு தட்டில் வெற்றிலைப் பாக்கின்மீது ரூ 1, ரூ. 21ம் சரசுவதிப் பூசைக்காக அணா, 1, அல்லது 2-ம் வைத்து வழங்கப்பெறும். இதனை அந்தந்த வீட்டுச் சிறுவர்களே ஆசிரியரிடம் தருவார்கள். செல்வர்கள் வீட்டில் மட்டிலும் இரண்டு ரூபாய், இரண்டு அனாவிற்குக் குறையாது. வறியவர்கள் வீடுகளில் அரை ரூபாய், ஒரனாவிற்குக் குறையாது. நடுத்தர வீடுகளில் ஒரு ரூபாய், ஓரணாவிற்குக் குறையாமல் வழங்கப்பெறும். நவராத்திரி பத்து நாட்களும் இம்மாதிரி வீடு வீடாகச் சென்று கோலாட்டம் அடிப்பதே முழு வேலையாக இருக்கும். கோலாட்டத்தில் பங்கு பெறும் சிறுவர்கள் வண்ணக் காலுறையும் மேலுறையும் அணிந்து கொண்டு ஆடுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். வகுப்புகளில் பாடங்கள் நடைபெறா. கோலாட்டப் பாட்டுகளைச் சொல்லித் தருவதும், ஒரு வகையில் கல்வி கற்றல்தானே. சரசுவதி பூசையன்று எல்லோருடைய நூல்கள், சுவடி கள் பள்ளிக்கூடத்தில் நிரல்பட அழகாக அடுக்கி வைக்கப் பெற்று அவற்றின்மீது கலைமகள் படமும் வைக்கப்பெறும்.