பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திண்ணைப் பள்ளி நிகழ்ச்கிகள் 39 தாமே. இதற்காக ஆசிரியர் ஊர்ப்பெருமக்கள் முன்னிலை யில் கடிந்து கொள்வதில்லை. அன்புடன் திருத்துவார். பள்ளிக்குத் திரும்பியதும் தவறுகள் செய்த சிறுவர்களை மட்டிலும் சற்றுக் கடிந்து கொள்வார். இவர்கள் தவறுகள் இழைக்காதிருந்தால் கோலாட்டம் மிகச் சிறந்திருக்கும் என்பதை அடிக்கடி சொல்லிக் காட்டுவார். இரண்டு உறுதியான மூங்கிற் கழிகளை நட்டு குறுக்கே ஒரு கழியைப் பொருத்திப் பின்னல் கோலாட்டத்திற்குத் தயார் செய்து வைத்திருப்பார். எல்லா வகைப் பின்னல்களும் அரங்கேற்றம் பெறும். சடைப் பின்னல் வகைகள், சதுரப் பின்னல் எல்லாம் நடைபெறும். கோலாட்ட விளையாட்டில் பின்னல் கோலாட்டம்தான் சிகரமாக அமையும். பெரும் பாலும் இதில் சிறுவர்கள் தவறுகள் இழைப்பதில்லை. ஊர்ப் பெருமக்களும் முக்கியமாக இந்த வகை ஆட்டங்களைத்தான் கவனிக்க வருவார்கள். இந்தப் பார்வையாளர்களின் முகத்தில் காணப்பெறும் மகிழ்ச்சிக்கேற்ப ஆசிரியரின் உற்சாகமும் மிகும். எங்கள் உற்சாகமும் பெருகி நிற்கும். வண்ண ஆடைகளை அணிந்து கொண்டு சிறுவர்கள் கோலாட்டம் போடுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். பள்ளி விழா ஊர் மக்களின் விழாவாக மாறி மக்கள் மகிழ்வதை இன்றும் நினைத்துப் பார்த்து அசை போட முடிகின்றது. அழுதலின் ஆழ்பொருள் : பெரகம்பியில் செல்லப் பிள்ளையாக வளர்ந்த காலத்தில் என்னிடம் குறிப்பிடத்தக்க இரண்டு பண்புகள் துலங்கினதை இன்று நினைவு கூர் கின்றேன். ஒன்று, அழுது அழுதே காரியத்தைச் சாதித்துக் கொள்வது. பெரும்பாலும் இப்பண்பு குழந்தைகளிடம் காணப்பெறும் பண்புதான். பிறந்தவுடன் குழந்தை அழுகின்றது. அஃது அழுவதால்தான் மக்கட்பேறு பெற்றவர்கட்கு மட்டற்ற மகிழ்ச்சி உண்டாகும். மக்கட்பேறு