பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 நினைவுக் குமிழிகள்-1 நேரிட்ட இல்லங்கட்கு விசாரிக்க வரும் உறவினர்கள், அன்பர் கள், நண்பர்கள் குழந்தை அழுததா?’ என்று கேட்பதை நாம் அறிவோம். சீதள அலமாரியை விட எத்தனையோ மடங்கு உயர்ந்த நிலையிலுள்ள தாயின் கருவறையில் எல்லா நலன்களும் பெற்றுப் பத்துத் திங்கள் பாங்குடன் வளர்ந்த குழந்தை புதியதோர் உலகிற்கு - இந்தக் கர்ம பூமிக்கு - வருகின்றது. தாயின் கருவறையிலிருக்கும்போது அதற்கு வேண்டிய உண்ணும் சோறு பருகும் நீர், தின்னும் வெற்றிலை' முதலிய அனைத்தையும் அன்னையிடமிருந்தே பெற்று விடுகின்றது. அங்கு அதற்கு ஒரு குறையும் இல்லை. இங்ங்னம் செல்வக் களஞ்சியம்’போல் சேம அறையில் எல்லாப் பாதுகாப்புடன் இருக்கும் குழந்தை, தானே அனைத்தையும் தேடிக் கொள்ள வேண்டிய புதிய உலகிற்கு வருங்கால் அழாமல் என்ன செய்யும்? இந்த அழுகை மொழி தான் குழந்தை தானாகக் கற்றுக் கொண்ட ஒரே மொழி யாகும்; தன் உயிர்ப்பிலேயே கற்றுக் கொண்டதுமாகும். இந்த ஒரே மொழியைக் கொண்டே தன் பெற்றோரிடமிருந்து சில திங்கள் காலம் அனைத்தையும் பெற்று வாழ்ந்து வளர்ந்து வருகின்றது குழந்தை. அறிவியல் நோக்கில் காணுவோமாயின் குழந்தைக்கு அழவேண்டிய இன்றியமையாமை உண்டு என்பதை அறியலாம். அன்னையின் கருவறையிலிருக்குங்கால் குழந்தை உயிர்ப்பதில்லை. அன்னையே அதனைச் செய்து அதற்கு வேண்டிய உயிர்க் காற்றை (Oxyger) நல்குகின்றாள். ஆதலால் கருவறையில் வாழும் குழந்தையின் நுரையீரல் (Lungs) செயற்படுவதில்லை. குழந்தை கருவறையிலிருந்து வெளிப் போந்ததும் அஃது அழுவதால் நுரையீரல் செயற் படத் தொடங்குகின்றது. பிறந்தவுடன் அஃது அழாவிடில் 10. இவை குறியீடுகள். தத்துவ நூலார் இவற்றைத் தாரக போஷக போக்கியங்கள்’’ என்பர்.