பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திண்ணைப் பள்ளி நிகழ்ச்சிகள் 41 மருத்துவப் பெண் அதனைக் கிள்ளியாவது அழவைக் கின்றாள். அதன் நுரையீரலைச் செயற்படச் செய்கின்றாள். இந்த உண்மைதான் குழந்தை அழுததா?’ என்ன வினாவில் அடங்கியுள்ளது. அழுதபிள்ளை பால் குடிக்கும்' என்ற பொன்மொழியில் அடங்கிக் கிடக்கும் உண்மையும் இதுதான். ‘பால் குடிக்கும்’ என்பது ஒரு மரபுத் தொடர்; பிழைக்கும்’ என்பது இதன் பொருள். இங்கனம் பிறர் மகிழ அழுது பிழைத்த குழந்தை தானாக அறிந்து கொண்ட அழுதல்' மொழியைத் தன் வாழ்வுக்குப் பயன்படுத்திக் கொள்வதை அறிகின்றோம். சில குழந்தைகள் குற்றம் செய்து விட்டுத் தாமாகவே அழுகின்றன. பெற்றோரோ மற்றோரோ அதனைக் கடிவதை விட்டு அதன் மீது இரக்கம் கொள்கின்றனர். இந்த இரகசியத்தைக் குழந்தை அறிந்து அற்புதமாகப் பயன் படுத்திக் கொள்கின்றது. இந்த அழுதலைச் சிறந்ததோர் கருவியாகக் கொண்டு நான் காரியங்களைச் சாதித்துக் கொண்டதை இப்பொழுது நினைவுகூர்கின்றேன். ஒரு சமயம் திருப்பதிக்குச் சென்று வந்த நாராயணன் என்ற நண்பன் வீட்டில் சமாராதனை நடந்தது. அப்போது எனக்கு வயது ஆறு இருக்கும். உணவு பரிமாறுபவர்கள் என் இலையில் நெய் சாதித்து விட்டனர். நெய் எனக்குப் பிடிக்காத பொருள். வேண்டாம் என்று சொல்வதற்கு முன் ஊற்றி விட்டனர். என்ன செய்வது? என் இயல்பை அறிந்து சொல்வதற்கு என் அம்மானோ பாட்டியோ அருகில் இல்லை. பெரிய அழுகையைத் தொடங்கி விட்டேன். அழுகையும் சாதாரண அழுகையன்று பெரிய தொழிற்சாலையில் ஊதப் பெறும் சங்கொலிபோன்றது அது! நெய் ஊற்றினவர் நெய் கலந்த உணவைத் தனியாக எடுத்தும் என் அழுகை நிற்க வில்லை. யாரோ என் அம்மானை இட்டு வந்து சமாதானம் செய்யச் செய்தனர். அவர் சொற்படி இலையை மாற்றினர்.