பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 நினைவுக் குமிழிகள் -1 நெய் பட்ட இலையில் கூட உண்ண முடியாது; அந்த மணமே எனக்கு வாந்தியை உண்டு பண்ணும். இலையை மாற்றின. பின்னர் தான் என் அழுகை நின்றது. இன்னோர் பண்பு தனக்கு நேரிட்ட பழியைப் பிறர் மேல் சுமத்துவது. பெரும்பாலோரிடம் இந்த இயல்பைக் காணலாம். சிறுவயதில் இந்தப் பண்பு என்னிடம் இருந்தது இப்போது நினைவிற்கு வருகின்றது. (இப்போது அப்பண்பு என்னிடம் அறவே இல்லை; இறையருள் அதனைத் துடைத்து விட்டது). கண்ணன் பிறப்பு விழா முடிந்ததும், அந்த விழாவில் பயன்பட்ட வழுக்கு மரத்தைப் பசனை மடத்தருகிலுள்ள சாவடியில் கூரையோரத்தில் உட்புறமாகக் கட்டி வைப்பதுண்டு. பகல் நேரத்தில் குரங்குச் சேட்டை யுடைய சிறுவர்கள் சாவடியின் விட்டத்திலேறி விளை யாடுவதுண்டு. நானும் அந்த மாதிரிச் செயலில் ஈடுபட்டேன். கூரைக் கொம்புகளைப் பற்றிக் கொண்டு வழுக்கு மரத்தின் மீது கால் வைத்து மெதுவாக நகர்ந்து கொண்டு வரும் போது தவறிக் கீழே விழுந்து விட்டேன். அப்பொழுது மேற் பற்கள் விழாத நிலை. கீழே விழுந்த போது மேல் வரிசையி விருந்து முன் பற்களில் இரண்டு உடைந்து வாயெல்லாம் இரத்தப் பெருக்கு ஏற்பட்டு விட்டது. ஒரே அழுகையுடன் வீடு திரும்பினேன். காரணம் கேட்ட என் பாட்டியிடம் 'கண்ணப்பாடியான் தான் என்னைக் கீழே தள்ளி விட்டான்' என்று பழியை ஒருவன்மீது சுமத்தினேன். கண்ணப்பாடியிலிருந்து என்னைப் போன்ற கிருஷ்ணசாமி என்ற ஒரு சிறுவன் தன் பாட்டி வீட்டில் வளர்ந்து வந்தான்; அவன் தாயை இழந்தவன். என் பாட்டி அவன் வீடு சென்று அவன் பாட்டியால் அவனுக்கு அடி வாங்கி வைத்தார். இந்தக் கிருட்டிணசாமி பின்னர் கண்ணப்பாடியிலுள்ள சொத்துகளை விற்றுக் கொண்டு பெரகம்பிக்கே குடியேறி விட்டான். வீடும் நிலமும் இங்கேயே வாங்கிக் கொண்டு மிக