பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றுார்த் திருவிழாக்கள் . 43 நன்றாக வாழ்கின்றான். மகா சாதுவாகிய அவனுக்கு அடி வாங்கி வைத்தேனே என்று இப்பொழுது என் மனம் வருந்து கின்றது. பெரகம்பி நண்பர்களில் இவன் இன்றும் வாழ்வது எனக்குப் பெரு மகிழ்ச்சியைத் தருகின்றது. ஒவ்வொரு நாளும் பள்ளியில் முறை வைப்பு முடிந்து வீடு திரும்பும்போதும், முற்பகல் வேலை முடிந்து வீடு திரும்பும்போதும் மாலையில் வீடு திரும்பும்போதும் மெதுவாக நடந்து வருவதில்லை. ஒரே ஒட்டந்தான். இதனால் இடது கால் பெருவிரலுக்கு அடுத்த விரலில் கல்லடி பட்டுப் புண்ணாகும். பெரகம்பியிலிருந்த வரையில் இந்த விரலில் நல்லெண்ணெயில் அல்லது தேங்காய் எண்ணெயில் நனைக்கப்பெற்ற துணியைச் சுற்றிக் கொண்டு தான் இருப்பேன். அந்த விரலில் காயத்துடன் இருக்கும் நாட்கள் தாம் காயத்துடன் இல்லாத நாட்களை விட அதிகம். இந்த அநுபவமும் எனக்குப் போதவில்லை. துணி சுற்றிய விரலையும் மறந்து மீண்டும் ஒடுவேன். பட்ட காலிலே படும்’ என்ற பழமொழிக் கிணங்க மீண்டும் அதே விரவில் தான் அடிபடும். ஆறாத புண்ணின்மீது திரும்பவும் அடி. இப்படித் தொடர்ந்து அடிபட்டு வந்ததால் அந்த விரலின் நகம் சொத்தையாகி விட்டது. இன்னும் அது அந்நிலையிலேயே இருந்து விழுப்புண்ணாக நினைவுகூர் வதற்கு வாய்ப்பாக உள்ளது. குமிழி-5 5. சிற்றுர்த் திருவிழாக்கள் @lisക്ഷ மூன்றே மூன்று திருவிழாக்கள்தாம் நடைபெற்றதை நான் கண்டதுண்டு. ஒன்று, ஆடிப் பதினெட்டு அன்று நடைபெறும் கரக ஆட்ட விழா. இதை முன்னரே குறிப்பிட்டுள்ளேன். (குமிழி -1) இதில் மிகச்