பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 நினைவுக் குமிழிகள்-1 சிறப்பாகச் சொல்லக்கூடியது ஒன்றுமில்லை. இரண்டாவது கண்ணன் பிறப்புத் திருவிழா இது மிகக் கோலாகலமாக நடைபெறும். இதில் சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர் கள் எல்லோருமே பெரும்பங்கு கொள்வர். நகர்ப்புறங் களில் பெரும்பாலும் நடுத்தரக் குடும்பங்களில்-சிறப்பாக அந்தணர், அதிலும் வைணவர் இல்லங்களில்-நடை பெறுவது போன்ற வீட்டு விழா நாட்டுப் புறங்களில் நடை பெறுவதை நான் பார்த்ததில்லை. பெரகம்பியில் வீட்டு விழாவே இல்லையென்று சொல்லி விடலாம். மூன்றாவது' காமன் பண்டிகை. இது இளவேனிற் காலத்தில் நடைபெறும். அதாவது மாசி, பங்குனி மாதங்களில் இதனைக் கொண்டாடுவர். பிள்ளையார் கோயில், பசனை மடம் இவற்றின் அருகில் நான்கு வீதிகள் சந்திப்பில் உள்ள விசாலமான இடமே இதற்கு உகந்த இடமாக அமைந்தது. இளவட்டங்களில் ஒரு செட்டியார் வீட்டுக் குடும்பம் பங்கு கொண்டது மிகவும் அற்புதமானது. அந்தக் குடும்பத் தில் இரண்டு சகோதரர்கள். அவர்களில் இளையவன் மிகத் துடுக்கானவன். அவனுடன் வேறு சில இளைஞர்களும் சேர்ந்து ஒரு பெரிய சப்பரத்தைச் சரிக் கட்டினர். மூங்கிற் சிம்புகளாலானது அப்பெரிய சப்பரம். வண்ணத்தாள்களை ஒட்டி, மேல் மூன்று அல்லது ஐந்து கலசங்களை பொன் தகடு போன்று பிரகாசிக்கும் குருநாதப் பட்டைத் தாள் களால் அமைத்துத் தயார் செய்தனர். சப்பரம் தயாரிப் பவர்கள் கூட இவ்வளவு அழகாகச் செய்ய முடியாது. வண்ணப் பாசிச்சரங்களையும் அசைந்தாடிகளையும் நாற் புறமும் தொங்கவிட்டு அலங்கரித்தனர். பெரியவர்கள் இந்தச் சப்பரத்தில் கண்ணன் எழுந்தருளி உலாவருவதற்கு ஒப்புக் கொண்டனர். சுமார் 20 வயதிற்குட்பட்ட இருபது இளைஞர்கள் இதில் பங்கு கொண்டிருந்தனர். நான், 6, 7 வயதுச் சிறுவனாதலால் இவற்றையெல்லாம் உன்னிப்பாகக்