பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றுார்த் திருவிழாக்கள் 45 கவனிப்பேனேயன்றி நேரடியாகப் பங்கு பெறுவதில்லை. அந்த இளைஞர்கள் என்னை எடுபிடி வேலைக்குப் பயன் படுத்திக் கொள்வர். கண்ணன் பிறப்பு : திருவிழாவன்று ஊர் முழுவதும் விழாக்கோலம் கொள்ளும். பல இடங்களில் வீதிகளின் குறுக்கே மாவிலை, வேப்பிலைத் தோரணங்கள் கட்டப்பட் டிருக்கும் பெரகம்பி என்ற அந்தச் சிற்றுார், “வண்ணமாடங் கள் சூழ் திருக்கோட்டியூர்” போல் காட்சி அளிக்கும் ஆயர்ப் பாடியின் சூழ்நிலை அமைந்து காட்டும், ஊர்ச் சிறுவர்கட்கு ஒரே குதுரகலம். ஒடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார் நாடுவார் நம்பிரான் எங்குத்தான் என்பார்; பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே." என்பன போன்ற சூழ்நிலையைக் காணலாம். பெரியவர்கள் பசனை பாடுவார்கள். விழாவன்று காலையிலிருந்தே பசனை மடத்தில் சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் கூட்டம் போவதும் வருவதுமாக இருக்கும். மாலை 4 மணிக்கே இளைஞர்கள் நிர்மாணித்த சப்பரத்தில் கிருஷ்ணன் படம் வைக்கப்பெற்றுத் திருவுலா தொடங்கும். அந்தச் சிறுவயதில் வயதிற்கேற்ப உற்சாகம் கொண்டேன். கண்ணன் பவனி வருவது, சப்பரத்தில் எழுந்தருளித் திருவுலாப் போவது, இன்று என்னை, தொடர்சங் கிலிகை சலார்பிலா ரென்னத் தூங்குபொன் மணியொலிப்பப் படும்மும் மதப்புனல் சோர வாரணம் பையநின் றுணர்வதுபோல், ll. பெரியாம். திரு. 1. 1: 2