பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 நினைவுக் குமிழிகள்-1 உடன்கூடிக் கிண்கிணி யாரவாத ரிப்ப உடைமணி பறைகறங்க தடந்தா ளிணை கொண்டு சார்ங்கபாணி தளர்நடை நடவானோ' என்ற பாசுரத்தை நினைக்கச் செய்கின்றது. சப்பரத்தைச் சூழவும், அதற்கு முன்னும் பி ன் னு ம் சிறுவர்கள், இளைஞர்கள்,பெரியவர்கள் சூழ கண்ணன் சப்பரத்தில் பவனி வரும் காட்சியைச் சற்றுத் தொலைவில் வீடுகளின் முன் வாசலில் நின்று காண்போருக்கு, தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும் தண்ணுமை எக்கம் மத்தளி தாழ்பீலி குழல்களும் கீதமும் ஆகி எங்கும் கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு மழைகொலோ வருகின்றது என்று சொல்லி மங்கைமார் சாலக வாசல் பற்றி நுழைவனர் நிற்பனர் ஆகி எங்கும் உள்ளம் விட்டு ஊண் மறந்துஒழிந் தாரே.'" என்று பாசுரத்தில் வருணிக்கப்பெற்றுள்ள காட்சி நினைவுக்கு வரும், தொலைவில் சப்பரத்தில் கண்ணன் கையில் குழல் கொண்டு எழுந்தருளியிருக்கும் காட்சியைக் காண்போரிடம் அவன் குழல் கொண்டு ஊதி எழுப்பும் ஓசையைக் கேட்பது போன்ற ஒரு பிரமை ஏற்படும். சிறுவி ரல்கள் தடவிப்பரி மாற செங்கண் கோடச் செய்யவாய் கொப்பளிப்பக் குறுவெ யர்ப்புரு வம்கூட லிப்பக் கோவிந்தன் குழல்கொ டுதினபோது' (கோட - வக்கரிப்ப; கூடலிப்ப - வளைய) 12. பெரியாழ், திரு. 1 8 : 1. 13. டிெ 3.4 : ! 14. டிெ 3.6 . 8