பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றுார்த் திருவிழாக்கள் 4? என்ற காட்சியை அவர்கள் மானசீகமாகக் காண்பர். செவி யுணர்வின் சுவை கொண்டு மகிழ்வது போன்ற பாவனை தோன்றும். தம்மையே மறந்து பிருந்தாவனத்திலிருப்பது போன்ற பாவனையில் ஆழ்ந்து விடும் நிலைமை ஏற்பட்டு விடும். இந்தப் பாவனையில், பறவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக் கறவையின் கணங்கள் கால்பரப் பிட்டுக் கவிழ்ந்தி றங்கிச் செவியாட்ட கில்லாவே...' (கணங்கள் - கூட்டங்கள்; படுகாடு கிடத்தல் - வெட்டி விழுந்த காடுகள் போல கிடத்தல் 1 மருண்டு மான்கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடைவாய்வழி சோர இரண்டு பாடும் துலுங்காப் புடைபெயரா எழுது சித்திரங்கள் போல நின்றனவே." (மருண்டு - அறிவழிந்து; வழிசோர நழுவி விழ: இரண்டுபாடு - முன் பின்பக்கங்கள்; துலுங்கா - அசையாமல்) மரங்கள் நின்றுமது தாரைகள் பாயும்; மலர்கள் வீழும்வளர் கொம்புகள் தாழும்; இரங்கும், கூம்பும்; திருமால் நின்றநின்ற பக்கம் நோக்கிவை செய்யும் குணமே." என்ற காட்சிகள் அந்தச் சிறுவயதில் தோன்றாவிட்டாலும் இன்று அந்த நிகழ்ச்சியை மீண்டும் மனத்தில் குமிழியிடும் போது அவை மனத்திற்கு பக்தி விருந்தளிக்கின்றன.