பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 நினைவுக் குமிழிகள்-1 பிள்ளையார் கோயிலுக்கு முன்னர் வழுக்குமரம் ஒன்று நடப்பெற்றிருக்கும்; அது சுமார் 20 அடி உயரம் உள்ளது. அதன் உச்சியில் மரத்தாலான கூண்டு பொருத்தப் பெற்றிருக்கும். ஓர் ஆள் அதில் நன்கு ஏறி உட்காரலாம். அந்தக் கூண்டினுள் முருக்கு, வடை, இனிப்புப் பலகார வகை கள், சின்ன உறியில் வெண்ணெய் முதலியவை தொங்கவிடப் பெற்றிருக்கும். வழுக்கு மரத்தில் கேழ்வரகுக் களி, விளக்கெண்ணெய் முதலிய வழுக்கிடு பொருள்கள் நன்றாகத் தடவப் பெற்றிருக்கும். பலர் வழுக்கு மரத்தில் ஏற முயல்வார்கள். அப்பொழுது பல சிறுவர்கள் மூங்கிலாலான பீச்சு குழலைக் கொண்டு ஏறுபவர்களின் உடலின் மீதும் முகத்தின் மீதும் தண்ணிர் பீச்சுவார்கள். இதனால் மரம் நன்றாக வழுக்கும்; ஏறுவது மிகக்கடினம். இறுதியாக ஏறுபவன் முதலில் பல சிறுவர்களையும் இளைஞர்களையும் ஏறச் செய்து வழுக்கிடு பொருள்களை வழுக்கி வழுக்கிக் குறைத்துவிடுவான். ஒருமணி நேரத்திற்குப் பிறகு ஏறத் திட்டமிட்டிருப்பவன் மிக்க சிரமத்துடன் ஏறி கூண்டிலுள்ள பொருள்களை உண்பான். முன்னால் ஏறுவதற்கு உதவி செய்தவர்கட்கும் மேலிருந்து வடை, முருக்கு போடுவான். இரண்டு முருக்குகளை விட்டு வைத்துவிட்டு இறங்கி விடுவான். மறுநாள் எளிதாக ஏறுபவர்க்கு இது பரிசு. இந்த விளையாட்டுகளையெல்லாம் சப்பரத்தில் வீற்றிருக்கும் கண்ணன் கண்டு களித்துக் கொண்டிருப்பான். தான் அவதார காலத்தில் சிறுவனாக இருந்தபொழுது செய்த சிறுகுறும்பு களையெல்லாம் இந்தக் கலியுகத்திலும் நினைவில் வைத்துக் கொண்டு மக்கள் செய்து மகிழ்வதைக் காணும்பொழுது அவனுக்கு மகிழ்ச்சி பொங்குமல்லவா? காமன் பண்டிகை; நான் பெரகம்பியில் சிறுவனாக இருந்தபொழுது காமன் பண்டிகை மிகச் சிறப்பாக கொண்டாடப் பெற்றது. சாதாரணமாக இப்பண்டிகை