பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றுார்த் திருவிழாக்கள் 49 (லாவணி என்றும் இது வழங்கப்பெறும்) மாசி மாதத்தில் ஏதோ ஒரு நாளில் நிறைவு பெறும் என்பதாக நினைவு. அறுபதாண்டுகட்கு முன்னர் நடைபெற்று வந்ததைச் சரி யாக நினைவு கூர முடியவில்லை. நினைவுக் குமிழி சரியாக எழ மறுக்கின்றது. பிள்ளையார் கோயிலருகே இது மாசி மாதம் தொடங்கும். நேராகவுள்ள சில கரும்புகளை தோகை வெளியில் தெரியுமாறு வைக்கோல் பிரியைச் சுற்றி ஒரு துரண் போலாக்கி நட்டு அதைச் சுற்றிலும் ஒரு பீடம் அமைக்கப் பெறும். அஃது எரிக்கப்பெறும் வரை நாடோறும் விளக்கு வைக்கப் பெற்று தீபாராதனை நடைபெறும். மன்மதன் இரதி வேடம் போட்டுக் கொண்டு பொருத்தமான பாடல் கள் பாடிக் கொண்டு வீடுதோறும் சென்று நிதி வசூல் செய்வார்கள். பக்க ஊர்கட்கும் சென்று வசூலிப்பது உண்டு. இந்த வசூலைக் கொண்டுதான் இந்த விழா கொண்டாடப் பெறுதல் வேண்டும். விழாவின் இறுதி நாளன்று ஒரு பெரிய படத்தேர் - தென்னை இளங்குருத்தினால் வேயப் பெற்றது - விழா நடைபெறும் இடத்தில் நிலையாக நிறுத்தப் பெற்றதாக நினைவு. ஆட்டமும் பாட்டமும் நடைபெற்ற பிறகு காமன் கொளுத்தப் பெறுவான். இரதி புலம்பல் அற்புதமாக நடை பெறும். இதனைக் கேட்பதற்கு ஊர்ப் பெருமக்கள் திரண்டு எழுவார்கள். இதில் இரதி வேடம் வழக்கமாகப் போட்டுக் கொள்பவர் கொசு ரெட்டியார் வீட்டைச் சேர்ந்த ஓர் இளைஞர். பார்ப்பதற்கு மெல்லியலார்போல் அழகாக இருந்ததால் இரதி வேடம் இவருக்கு நன்கு பொருந்திற்று. ஆண்டுதோறும் இவருக்கு இந்த வேடம் உரிமையாகப் போய்விட்டது. கொள்ளுக்கார ரெட்டியார் வீட்டைச் சேர்ந்தவர் மன்மதன் வேடம் போட்டுக் கொள்வார். அவர் மாநிறமாக இருப்பார். பொருத்தமான நல்ல


4 س--