பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 நினைவுக் குமிழிகள்-2

சொல்லாலே தோன்றிற் றன்றே

யார் கொல் இச் சொல்வின் செல்வன்?"

என்ற பாடல் நினைவிற்கு வந்தது என் மைத்துனர் இராமசாமியின் புகழ்மாலையைக் கேட்டு. அதுமன் தன் நளினமான பேச்சால் இராமனது மனத்தைக் கவர்ந்தவன். என்மைத்துனர் இராமசாமி தன் வருங்கால மாமனார் சுப்பிரமணியத்தின் சற்றுத் திக்குவாயுடன் பேசும் படா டோபப் பேச்சைக்கேட்டு மயங்கிவிட்டார். அவர் படாடோப மாகப் பேசுபவர் என்பதை நான் திருமணத்திற்குப் பின்னர் தான் அறிந்தேன். இதைக் கேட்ட என் உள் மனம் இப்படி என் மைத்துனர் மதிமயங்கி விட்டாரே என்று கவலை, பட்டது. என் மனைவியும், தன் அண்ணனைப் பல்லாண்டு கள் கூர்ந்து கவனித்தவளாதலின், 'என் அண்ணன் எப் பொழுதும் இப்படித்தான் முதலில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவார்; இறுதியில் காலால் எற்றிவிடும் நிலைக் குத் தள்ளப்படுவார்' என்று கூறினாள், காலப்போக்கில் இந்த உண்மையைக் காண முடிந்தது.

சில நாட்கள் கழித்து என் மாமனாரும் மாமியாருமாகத் துறையூருக்கு வந்தார்கள். புதுக் குடித்தனம் வைத்து இரண்டாண்டுகட்குப் பிறகு அவர்கள் வந்தது இதுதான் முதல் தடவை. மகள் மருமகனைத் தம் மகன் திருமணத் திற்கு வருமாறு நேரில் அழைத்ததாக இருக்கும் என்று நினைத்து வந்து சேர்ந்தார்கள். இரண்டு நாட்கள் தங்கி யும் இருந்தார்கள். இவர்களும் வெள்ளை மனம் உடைய வர்கள். பண விஷயத்தில் இருவரும் கெட்டி: மனிதர்களை அளந்து பார்ப்பதில் சிறிதும் அறிவில்லாதவர்கள். நீக்கு போக்கு இல்லாமல் பேசுவார்கள். இவர்கள் வருங்கால ஆண் சம்பந்தி சுப்பிரமணியத்தைப்பற்றிப் பேசுவதை

1. கம்ப்ராட்ெவிந்தை அதுமம் 20,