பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சதியின் பல்வேறு வடிவங்கள் 93.

கயவனாக மாறத் தொடங்கினான். கணவனும் மனைவியும் இவன்மீது பற்றும் பாசமும் வைத்திருந்ததால் இவன் சொல்லுவதை எல்லாம் நம்பி வந்தனர்; இவன் கயவனாக மாறியதைச் சிறிதும் ஐயம் கொள்ளாதிருந்தனர். ஒருநாள் அவன் மனைவியைத் தனியாகச் சந்தித்து 'உன் கணவன் சென்ற பிறப்பில் உப்புக்குறவனாக இருந்ததாகத் தெரி கின்றது” என்றான்.இவன் சோதிடமும் ஆரூடமும் அறிந்த வனாகவும் நடிப்பவனாதலால் அதை அந்தப் பெருமாட்டி நம்பினாள். "எப்படித் தெரியும்?' என்று கேட்க, 'கணவன் துரங்கும்போது அவர் உள்ளங்காலை நக்கிப்பார்; உண்மை தெரியும்” என்று சொல்லி வைத்தார். இப்படியே கணவனைத் தனியாகச் சந்தித்து, “உன் மனைவி அடிக்கடி உங்களோடு வள்வள்’ என்று விழுவதால் அவள் சென்ற பிறப்பில் நாயாக இருந்திருக்கவேண்டும்' என்றான். "இதை எப்படி அறிவது?’ என்று அவர் வினவ, நீங்கள் துரங்கும் போது உங்கள் உள்ளங்காலை அவள் நக்குவாள்; அதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.' என்று சொல்லி வைத்தான்.

இருவரும் இதைச் சோதித்து அறியும் காலத்தை எதிர் பார்த்திருந்தனர். ஒருநாள் கணவனும் மனைவியும் ஒரு படுக்கையில் படுத்திருந்தனர். கணவன் சோர்வாக இருப்ப தாகக் கூறி உறங்கிவிடுகின்றார்: குறட்டையொலியும் எழச் செய்கின்றார். மனைவியும் வீட்டு வேலை அதிகமிருந்த தால் அலுப்பாக இருப்பதாகக் கூறி உறங்கிவிடுகின்றாள். இருவர் செயல்களும் வெறும் நடிப்பே; சோதனை செய்யும் நோக்கத்தில் இருவரும் பாசாங்கான தூக்கத்தில் ஆழ்ந்திருந் தனர். நள்ளிரவு வந்ததும், மனைவி கணவனின் உள்ளங் காலை நக்கினாள்; உப்பு கரித்தது. 'நீங்கள் சென்ற பிறப் பில் உப்புக்குறவன் என்று சோதிடம் கூறியது சரியாய்ப் போய்விட்டது. குறவனைக் கட்டிக் கொண்டது என் தலை எழுத்து' என்று மனங் கவன்றாள். கணவனும் உன்