பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சதியின் பல்வேறு வடிவங்கள் 95

யிருந்த பத்து நாட்களும் அவரும் தங்கியிருந்தார். நாடோறும் விருந்து உபசாரங்களுக்குக் குறைவில்லை. இந்த சமயத்தில்தான் ஒருநாள் மணியக்காரர் திண்ணையில் நல்லப்பரெட்டியார் "என்ன இராமசாமி, இப்போது வண்டி எப்படி ஒடுகின்றது?” (குமிழி-75) என்ற கேள்வியை எழுப் பியதாக நினைவு.

இந்த விடுமுறையில் என் மனைவி பொட்டணம் செல்வ தற்குக் காரணம் என்ன? தன் பெற்றோர் தனக்குத் தருவ தாகப் பிரகடனம் செய்திருந்த பத்தாயிரம் ரூபாயை எப்படி யாவது வாங்கி வந்துவிடவேண்டும் என்பது திட்டம். பத்து நாட்கள் இதற்காக முயன்றும் பயன் இல்லை. இப்போது தாய் தந்தையர்கள் கொடுத்துவிடவேண்டும் என்று வற்புறுத்தினார்கள். என் மைத்துனர் சிறிதும் அசையவில்லை. இரண்டாண்டுகட்கு முன்னர் துறையூரில் தனிக்குடும்பம் வைக்கும்போது தங்கையின் கணக்கைத் தீர்த்துவிடலாம்' என்று என் மைத்துனர் சொன்னபோது அவர் பெற்றோர்கள், அதற்கு இப்போது என்ன அவசரம்? புத்திர பாக்கியம் ஏற்படட்டும். அப்போது தந்துவிடலாம்' என்று சொல்வித் தடுத்தார்கள். இப்போது அவர்கள் தந்து விடலாம்’ என்றபோது என் மைத்துனர் ஏதேதோ சொல் விக் கொண்டு காலம் போக்கினார். "என் மனைவி இலவு காத்த கிளி போலாவாள்' என்பது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. சுப்பிரமணியம் வீட்டுப் பெண்ணை மணந்த பிறகு இப்பணம் தனக்குக் கிடைப்பது கஷ்டம் என்று நினைத்ததுதான் என் மனைவி பிறந்தகத்திற்கு வந்திருக் கின்றாள் என்பதை அறிந்தேன். அப்போதும் சரி, இப்போதும் சரி என் மாமனார் வீட்டுப் பணத்தைப் பற்றி ஆசை வைத்ததில்லை. சொத்து, சுகம் என்று அப்போது என் மனம் எண்ணவில்லை. என கடன் பணி செய்து