பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 நினைவுக் குமிழிகள்-2

கிடப்பதே என்ற உயர் எண்ணம் என்னை ஆட்டிப் படைத்ததால் பள்ளி முன்னேற்றத்திலேயே என் கவனமெல் லாம் சென்றது. -

பத்துநாள் விடுமுறை நெருங்கிக் கொண்டிருந்தது. நானும் பொறுமை இழந்து என் மைத்துனரிடம் "ஏதாவது வழி செய்து எங்களை அனுப்பிவிடுங்கள்” என் றேன். அவர் வக்கிலைக் கலந்து யோசித்துதான் செய்யவேண்டும்" என்றார். இதில் சட்ட நுணுக்கம் என்ன வேண்டியிருக் கின்றது? ரொக்கத்தைக் கொடுத்தனுப்புவதற்கு வக்கீல் எதற்கு' என்றேன். "மாமனாரே நீதிபதிபோல்-பெரிய வழக்குரைஞர் போல்-பக்கத்திலிருக்க-அதுவும் இப்போது பொட்டணத்திலே இருக்க-நாமக்கல் பயணம் எதற்கு?" என்ற எண்ணம் வெளிக்கிளம்ப இருந்தது; அப்படியே அடக்கிக் கொண்டு மெளனமானேன். ஆனால் இவர்கள் விட்டுச் சீதனப் பணம் கருச்சிதைவு கதைதான்; அல்லது ஆயுதப் பிரசவம்தான்' என்று மனத்தில் தெளிவாகத்

தெரிந்தது.

என் மைத்துனர் என் மனைவியிடம் "உன் அம்மா பேரில் ரூ. 1700/- ரூ. 500/-க்கு உள்ள இரண்டு புரோநோட்டு களையும் முதலில் மேடோவர் வாங்கு: நான் தருவதை உன்னிடம் இருப்பதாக நினைத்துக் கொள்.’’ என்று கூற, அவர் சொன்னபடி என் தாயை வற்புறுத்தி இச்செயலை ஒரே நாளில் நிறைவேற்றிக் கொண்டாள். ஆனால் போடி நாயக்கன்பட்டி (1) மிட்டாதார் பொன்னுசாமி ரெட்டி யார் (2) அவர் தம்பி கிருஷ்ணராஜு ரெட்டியார் (3) அவ் வூரிலுள்ள இராமநாதன் இவர்கள் என்மாமியாருக்கு எழுதித் தந்துள்ள முறையே ரூ. 3000/- ரூ. 1000/- ரூ. 1000/- என்ற தொகைகளுக்குரிய புரோநோட்டுகளைப் பற்றிப் பேச்சே எழவில்லை. அந்த நோட்டுகள் என் மைத்துனரிடம்