பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சதியின் விசுவரூபம் 99 .

வந்தடைந்தன. இனிமேல் முருகன்த்திேருவிளையாடல் கள்’ போல் சுப்பிரமணியத்தின் திருவிளையாடல்கள்’ -சூழ்ச்சிச் செயல்கள் தொடங்கப் போகின்றன.

குமிழி-78 14. சதியின் விசுவரூபம் -

ஆகுவ தாகுங் காலத்து

அழிவதும் அழிந்து சிந்திப் போகுவ தயலே நின்று

போற்றினும் போதல் செய்யும்." என்ற கம்பன் வாக்கு இக்குமிழிக்கு முன் தலை; காட்டு கின்றது. காலத்தில் ஆக வேண்டியது ஆகியே தீரும்; அழிய வேண்டியதும் அழிந்து சிதறிப் போகும். அழிதன்மாலைத் தாகிய அதனை அருகில் நின்று பாதுகாத்தாலும் அது போயே தீரும்’-இந்த மாபெரும் உண்மையைக் கும்ப கருணன் வீடணனுக்கு எடுத்துக் காட்டுகின்றான். இந்த உண்மை என் மைத்துனர் குடும்பத்திற்கு முற்றிலும் பொருந்துவதை உணர்ந்ததால் குமிழி எழுவதற்கு முன் முந்திரிக் கொட்டைபோல் முன்னர் எழுந்துவிட்டது

இப்பாடல். -

என் மைத்துனரின் பலஹீனம் ஒன்று, சோதிடப் பைத்தியம்; மற்றொன்று, நீதிமன்ற வழக்குகளில் பங்கு கொள்வது; மூன்றாவது, முப்பத்தைந்து வயது வரையிலும் குடும்பப் பொறுப்பு தரப்பெறாமையால் ஏற்பட்ட விளைவு கள். எலி கருவாட்டின்மீது கொண்ட ஆர்வத்தால் பொறி யில் மாட்டிக் கொள்வது போலவும், தூண்டிலிலுள்ள நாக்குப்பூச்சியின்மீது கொண்ட ஆசையால்ieன் தூண்டு

1. கம்ப. யுத்த. கும்பகருணன்வதை-166,