பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சதியின் விசுவரூபம் 101

தெறிந்தன. இச்செயலே பரம்பரையாகத் திரட்டிய செல்வம் அழிவதற்கு ஒர் உற்பாதம்போல் அமைந்தது. இந்தக் குமிழிகளின் முதற்பகுதியில் (குமிழி-57) பர்ட்டியின் மனத்தைப் பணத்தாசைகாட்டி எப்படி எப்படியெல்லாம். என் மைத்துனர் மாற்றி வந்தார் என்ற விவரங்கள் வெளி வந்துள்ளன. பாட்டிக்கு வயது ஏற ஏற நினைவு தடுமாறி யது; ஒரு மணித்துளியில் சொன்னது அடுத்த மணித்துளி யிலே மறந்துவிடும். கிட்டத்தட்ட மனமே செயற்படாத நிலை வந்துவிட்டது. இந்த நிலையை நன்கு பயன்படுத்தி சார்பதிவாளருக்குப் பெருந்தொகை கையூட்டு செய்து இல்லத்திற்கு மகிழ்வுந்தில் வர ஏற்பாடு செய்து இரண்டு ஆவணங்களைப் (Documents) பதிவு செய்யச் செய்தார் கைகேயி பெற்ற இருவரங்களால் தசரதன் மறைந்து பதினான்கு ஆண்டுகள் அரசனில்லாது தவித்தது அயோத்தி அரசு. அதன் பிறகு இராமன் ஆண்ட விவரங்களை நாம் இராமாயணத்தால் அறியக்கூடவில்லை. ஆனால் புதியன விாக ஏற்படுத்தப்பெற்ற இரண்டு ஆவணங்கள் என் மைத்துனரின் பெருஞ்செல்வம் அழியவும், அவர்தம் இறுதி நாட்களை வறுமையாலும் கவலைகளாலும் துக்கப்பட்டு மாளவும் காரணமாக அமைந்தன.

கூத்தாட் டவைகுழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்றே"

என்று செல்வ நிலையாமையையும்,

. ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப

கோடியும் அல்ல பிற"

2. குறள்-332 3. டிெ 37