பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 நினைவுக் குமிழிகள்-2

வட்டி முழுவதையும் அசலில் ரூ. 10/-ம் தள்ளி நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தின் சட்டவரம்பை (Jurisdiction) ஏற் படுத்திக் கொண்டு பிராது எழுதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம். இதற்கு அவர் (பிரதிவாதி) தாக்கல் செய்யும் எழுத்து வாக்குமூலத்தைக் (Written statement) கண்டு அடுத்த புரோநோட்டுபற்றி யோசிப்போம்”என்று அன்பாகச் சொன்னார்கள். செலவுக்குத் தேவையான பணத்தைக் கொடுத்துவிட்டுத் துறையூர் திரும்பினேன்.

ஒருசில நாட்களில் பொன்னுசாமி ரெட்டியார்மீது பிராது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பெற்றது. அவரும் துரை வக்கீலை அமர்த்திப் பதினைந்து நாட்களில் எழுத்து வாக்குமூலத்தைத் தாக்கல் செய்தார். இதைப்,பரிசீலனை செய்து வீரராகவ அய்யங்கார், “பிடிகொடுத்துவிட்டார்கள். இரண்டாவது புரோநோட்டின்மீதும் வழக்குத்தொடரலாம். தொடரத்தான் வேண்டும். காலம்தாழ்த்தித் தொடர்ந்தால் நமக்குப் பாதகமாகவும் முடியலாம். உடனே புறப்பட்டு வருக’ என்று கடிதம் எழுதினார்கள். தானும் ஒரு சனிக் கிழமையன்று நாமக்கல் சென்று இரண்டாவது நோட்டு எழுதித் தந்த கிருஷ்ணராஜ ரெட்டியாரின்மீது வழக்குத் தொடர ஏற்பாடு செய்தேன். முறைப்படி பிராது நீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் நம்பர் விழுந்ததும். இரண்டு வழக்குகளும் ஒரே தேதியில் விசாரணைக்கு வரு மாறும் கோரப்பட்டது. -

(2) துறையூரிலிருந்து வக்கீல் அரங்கசாமி ரெட்டியார் மூலம் (1) என் மாமனார் ஆ. பெத்து ரெட்டியாருக்கும் (2) என் மைத்துனர் ஆ. பெ. இராமசாமி ரெட்டியாருக்கும் பிழைப்புக்கான தேவைகள் கோரி தம் கணவருக்கும் மகனுக்குமாக நோட்டீசுகளை அனுப்பினார் என் மாமியார். அவற்றில் முதலில் காப்பு ஆவணம் ஏற்பட்டதும், பின்னர்