பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 நினைவுக் குமிழிகள்-2

சுப்பிரமணியத்துடனும் வேறு சிலருடனும் அந்தக் காட்டிற்கு வந்திருந்தனர். பக்கத்து ஊர் கிராம முனிசிப்பு தலைமையில் இந்த அறுவடைக்கு ஏற்பாடு செய்திருந்தமையால், அந்தக் கிராம முனிசீப்பும் 10 ஆட்களும் கும்பலாகக்கூடியிருந்தனர். அறுவடையும் முடிந்த சோளத்தட்டை கதிர்களுடனும்’ எள்ளு செடியும் தனித்தனியாகக் கட்டப் பெற்று வரிசையாக வைக்கப் பெற்றிருந்தன,

நான் முனிசிப் இருந்த இடத்திற்குச் சென்றேன். அவர் அன்பாகப் பேசினார். உங்களுக்குள் தகராறு எதற்கு? சுமுகமாகத் தீர்த்துக் கொள்வது நல்லது’ என்ற தொனியில் பேசலானார். தொலைவிலிருந்த பெரிய குண்டுத்தம்பு முனிசீப்பு பீ தின்துவிட்டான்(கையூட்டு வாங்கிவிட்டான்); வேறுபோக்கில் பேசுவான். விழிப்பாக நடந்து கொள்ளுங் கள்' என்று என்னை எச்சரித்தார். முனிசிப்பு பேச்சிலிருந்தும் நிலைமையைப் புரிந்துகொண்டேன். நான் முனிசீப்பிடம் சொன்னது தங்கள் உதவிக்கு மிகவும் நன்றி. இரவில் மிகவும் சிரமப்பட்டிருக்கின்றீர்கள்.நீங்கள் சொல்லுவதுபோல சுமுகமாகப் போவதுதான் சரி. நானும் இப்படி நினைத்து தான் துறையூரிவிருந்து வந்தேன். ஆட்களின் சம்பளம் ரூ. 300/-யும் என் மைத்துனரிடம் வாங்கிக் கொள்ளுங்கள், மகசூலை அவரிடம் ஒப்படைத்துவிடுங்கள். மீண்டும் நன்றி: என்று சொல்லிக்கோண்டு முனிசீப்பிடமிருந்து விடை பெற்றேன். பின்னர் இரண்டு தம்புகளிடமிருந்தும் விடை பெற்றுக்கொண்டே வந்த வழியே திரும்பி நாமக்கல் வந்து சிற்றுண்டி உண்டு துறையூர் இரும்பினேன். இது ஒருவகை அதுவம், .

இந்த 15 ஏக்கர் நிலத்தையும் என் மைத்துனருக்கே கிரயம் எழுதிக் கொடுத்து விட உத்தேசித்தோம். அரங்க சாமி ரெட்டியார் மூலம் இந்த ஏற்பாடு நடந்தது. ரூ 12,50/