பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்கு முடிவுகள் 141

தம்முடைய எழுத்தரை இதில் உதவும்படி பணித்தார். எழுத்தரும் "பட்டணத்து எருமைகளைக் கன்றில்லாமல் கொஞ்சம் பிண்ணாக்கு நீர் கலந்த தவிட்டைக் காட்டிப் பால் கறப்பதைப் போல ஒரு பத்து ரூபாயை பொறுப்பாள ருக்குக் காட்டி விஷயங்களைக் கறந்துவிடலாம்” என்று கூறினார். சனியன்று மாலை 6 மணி சுமாருக்கு எழுத்த ருடன் வட்டிக்கடைக்குச் சென்றேன். எழுத்தர் என்னை அந்த வட்டிக்கடைஏஜண்டு அய்யங்காருக்கு அறிமுகம்செய்து வைத்தார். நான் அய்யங்காரிடம் “ஒன்றும் இல்லை ஐயா, போடி நாய்க்கன்படி பொன்னுசாமிரெட்டியாருக்கு நம் கடையில் பற்று-வரவு ஏதாவது இருக்கின்றதா? மாவட்ட நீதிமன்றத்தில் ரூ. 4000/-கடனுக்கு அவர் பேரிலும் அவர் தம்பி கிருஷ்ணராஜு பேரிலும் ஒரு வழக்கு தொடரப் பெற்றிருக்கின்றது. விசாரணையில் இந்தத் தகவல் தேவைப்படும் என்று வக்கீல் சொன்னார். அதற்காகத்தான் தங்களிடம் யான் வந்தது’ என்று சொன்னேன்.

இச்சமயத்தில் என்னுடன் வந்த வீரராகவ அய்யங் காரின் எழுத்தர் ரூ. 10 ஐ மெதுவாக எடுத்து பாயின்மீது வைத்தார். இந்த மாதிரி வட்டிக்கடையில், செட்டிநாட்டில் உள்ள மாதிரி, யார் வந்தாலும் தரையில் பாயின்மீதுதான் உட்கார வேண்டும். ஏஜண்டுக்கு முன்னர் பள்ளிப் பிள்ளை கள் படிக்கும் சிறிய மேசைபோல் ஒரு சாய்வு மேசை தான் பயன்படுத்துவது; அவரும் கீழேதான் அமர்ந் திருப்பார். இந்தப் பத்து ரூபாய் தாளைக் கடைக்கண்ணால் பார்த்தார் ஏஜண்டு. பரவா இல்லை; பரவா இல்லை’ என்று சொல்லிக்கொண்டே ஏஜண்டு எங்களுடன் பேசிக் கொண்டே இருந்தார். பேச்சில், 'ஆம்; உண்மையே. பொன்னுசாமி ரெட்டியாருக்கு எங்களிடம் பற்று-வரவுக் கணக்கு உள்ளது. ஏதோ கள்ளுக்கடைக் குத்தகை எடுப்ப தற்காக (புரோநோட்டில் கண்டது) 26ஆயிரம் 15 சதவிகிதம்