பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 நினைவுக் குமிழிகள்-2

வட்டியில் வாங்கியதாக நினைவு. இந்த நோட்டில் பொன்னுசாமி ரெட்டியாருடன் வேறு ஐவர் சேர்ந்து கூட்டாகக் கை எழுத்திட்டிருப்பதாகவும் நினைவு’ என்றார்.

உடனே நான், அது சரி; இந்தப் புரோநோட்டுக் கணக்கு பேரேட்டில் தாக்கல் செய்யப்பெற்றுள்ளதா? இது வருமான வரிக் கணக்கில் காட்டப்பெற்றுள்ளதா? பேரேடும் புரோநோட்டும் வருமானவரி அலுவலகத்திற்கு அனுப்பப் பெற்று இரண்டிலும் வருமானவரி அலுவலக ரப்பர் முத்திரை விழுந்திருக்கின்றதா?’ என்றெல்லாம் கேட்டேன். பத்து ரூபாய்த் தாளின்மீது ஏஜண்டு ஒரு கண் வைத்து தன் ஆசையைப் புலப்படுத்தியதால் இவற்றையெல்லாம் கேட்கும் துணிவு வந்தது எனக்கு. என்னுடன் வந்த எழுத்தருக்கும் என் துணிவு வந்தது. இவர் பனங்காட்டு நரி, தந்திரமாகச் செயற்படுவார். எத்தனை வழக்குகளில் அநுபவப்பட்டிருப் பார்: "ஐயா, ஒரு சிறு வேண்டுகோள். இந்த இரண்டிலும் முத்திரை விழுந்திருப்பதைத் தம் கண்களால் காண விரும்பு கின்றார் நம் ரெட்டியார்’ என்று குறுக்கிட்டுப் பேசினார். உடனே ஏஜண்டும் இந்த இரண்டையும் எடுத்துக் காட்டி னார்; பதியப்பெற்றுள்ள பேரேட்டுப் பக்கத்தையும் பிரித்துக் காட்டினார். நாங்கள் ஏஜெண்டிடம் விடை பெற்றுக்கொண்டு திரும்பினோம்-எழுத்தர் வைத்த பத்து ரூபாய்த் தாளை எடுக்காமல் கையூட்டு செய்யும் அற்புதப் பணியை நேரில் கண்டேன். -

திங்களன்று முதல் வேலையாக வட்டிக்கடை ஏஜண்டு கணக்குகளுடன் நீதிமன்றத்திற்குச் சாட்சியாக வருமாறு பயணப்படி கட்டி அவசரமாக ஆள் (அமீனா) அனுப்பப் பெற்றது:இதன்படி ஏஜண்டு செவ்வாயன்றுநீதிமன்றத்திற்கு வந்தார். கிளிக்கூண்டில் ஏற்றி அவரிடம் கறக்கவேண்டிய செய்திகளை எல்லாம் அற்புதமாகக் கறந்தார் வக்ல்ே.