பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்கு முடிவுகள் 143

அடுத்து நான் கூண்டில் ஏறி இந்தப் புரோநோட்டுகள் பற்றி நான் அறிந்ததைத் தெளிவாக எடுத்துரைத்தேன். பின்னர் பொன்னுசாமிரெட்டியாரும் கிருஷ்ணராஜு ரெட்டியாரும் கூண்டில் ஏறினார்கள். கள்ளுக்கடைக்குக் கடன் வாங்கின புரோநோட்டின் மீது ஏராளமான குறுக்குக் கேள்விகள்; தம்மிடம் தகராறு தீர்த்துவைக்குமாறு பெரியம்மாள் (என் மாமியார்) வந்தது பற்றிச் சரமாரி யான கேள்விகள் கேட்கப்பட்டு திணற அடிக்கப் பெற்றார். இதன்பிறகு என் மைத்துனர் கூண்டேறினார். புரோ நோட்டுகள் அவரிடம் இருப்பதுபற்றி விசாரணை. இவற்றின் சாரம்: 'பொன்னுசாமி ரெட்டியாருக்கு எப்போதும் பணத்தேவை இருக்கும். கடன்வாங்க அவரது திருக்கரங்கள் நீட்டியபடியே இருக்கும். கைமாற்றுக் கடன்கள் ஏராளம். பெரியம்மாளிடம் வாங்கின கடன் உண்மையே; அவர் பேருக்கு நோட்டு எழுதித் தந்ததும் உண்மை. தகராறு தீர்த்துவைக்குமாறு பெரியம்மாள் பொன்னுசாமி ரெட்டி யாரிடம் அணுகியதாகக் கூறியது அபாண்டக் கற்பனை. இந்தப் பைசலில் தாம் தலையிடாததால் பெரியம்மாள் தம் மீது கோபங்கொண்டு இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார் என்று கூறுவது அப்பட்டமான சோடிப்பு.'

பதினைந்து நாட்களில் இந்த வழக்கின் தீர்ப்பு கூறப் பெற்றது. இதன் சுருக்கம் : “ இந்தக் கொடுக்கல் வாங்கல் நடைபெற்றது உண்மை. குடும்பத்தில் தாய். மகன் தகராறி னால் இந்த வழக்கு ஏற்பட்டது. பரம்பரையாகத் தாய் மூலம் பெற வேண்டிய சொத்துகளை அநியாயமாக எழுதி வாங்கிக்கொண்டு இராமசாமி ரெட்டியார் தன் தாயைத் தெருவில் விட்டுவிட்டார். தன் தாய் பேரில் உள்ள புரோ நோட்டுகளை எடுத்து வைத்துக் கொண்டு இந்த 4000 யும் அபகரிக்கப் பார்க்கின்றார். இந்த நிலையில் ரூ. 4000 மும் வட்டி செலவு தொகைகளுடன் பெரியம்மாளைச் சேர