பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XV

சில எழுத்துப் பிழைகளும் உள. (எ.கா.) 10x2400 ச.கெ. (பக். 121); இருவர்களையும் (பக். 347) எழுத்துப் பிழைகள் அடுத்த பதிப்பில் திருத்தப் பெறுவதற்குரியன். திருத்தலப் பயணம் பற்றிய பகுதி (பக். 293-362) சற்று நீண்டுவிட்டதோ என்று தோன்றுகின்றது.

தமிழ்நாட்டுப் பள்ளிகளில் அமைந்த இலவச நண்பகல் உணவுத்திட்டம் (பக். 117-118) முதன் முதலில் எப்போது தொடங்கப் பெற்றது என்பது குறித்துச் சில ஆண்டுகளுக்கு முன்னர் கருத்து வேறுபாடுகள் எழுந்தன. இத்திட்டம் முதன் முதலாக சென்னை மாநகர் மேயராக விளங்கிய நீதிக் கட்சியைச் சார்ந்த திரு. தியாகராயர் அவர்களால் தொடங்கப் பெற்றது என்று தெரிவிக்கப் பட்டுள்ள கருத்தும் இங்குக் குறிப்பிடத்தக்கதாகும். 3.

பேராசிரியர் அவர்கள் பல்வேறு பண்பு நலன்களைக் கொண்டுள்ளதனை அறிகின்றோம். இருப்பினும் விழுப்பம் தரும் ஒழுக்கத்தினை-தனி வாழ்க்கை ஒழுக்கத்தை (morality)- உயிரினும் உயர்வாக அவர் போற்றி வருவ தனையே அவரிடம் அமைந்த சீரிய பண்பு நலனாகக் கூறலாம். பொருளாசையையும், பெண்ணாசையையும் ஒருவர் சமாளிக்கக் கூடுமானால் அவர் மனத் துய்மையுடன் வாழலாம் என்பதில் நம்பிக்கை கொண்டவர் பேராசிரியர் (பக். 28). அண்மையில் ஆங்கில நாள்தழ் ஒன்றுக்குப் (Indian Express dt, 18-11-89) Gulilo.usfjäg, sororit பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர். வா. செ. குழந்தைசாமி அவர்கள் நன்னெறி, ஒழுக்கம் (moral and ethical plane) பற்றிய தம்முடைய கொள்கையைக் குறிப் 17Gib Guirg. “What I cannot achieve in Public I shall not "do in Private எனக் குறிப்பிட்டுள்ளார்கள். நம் பேராசிரியர் அவர்கள் பொதுவாழ்க்கையில்-அலுவல் துறையில்-சீரிய நெறிகளைப் பின்பற்றியதன் காரணமாகத்தான் தனி வாழ்க்கையிலும் (Private life) அவர் சிறப்பான வெற்றி களைப் பெற்றுள்ளார் எனலாம். எத்தனை ஆண்டு அநுபவம் பெற்றிருப்பினும் மேற்கொண்ட பணியில் உள்ளத் தூய்மை யுடன் ஈடுப்டாவிடால் எதனையும் சாதிக்க இயலாது என்பதனை உளங்கொண்டவர் பேராசிரியர் அவர்கள். வக்கற்றவனுக்கு வாத்தி தொழில்’ என்பது உலக மொழி யாயினும், அன்புடைய மனைவி இறுதிவரை கணவனே தெய்வம் என்று வாழ்வதைப் போன்று' பேராசிரியர் அவர்