பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலத்துடையாம்பட்டிச் சொத்து 149

காளைகளை வண்டியில் பூட்டினர். நாங்கள் இருவரும் வேறோர் அன்பரும் வண்டியில் ஏறிக் கொண்டோம்" கிருஷ்ணசாமி ரெட்டியார் வண்டியின் பின்புறம் அமர்ந்தார். வண்டி கிளம்பியதும் காளை மூர்க்கத்தனமாக வண்டியை இழுத்துக் கொண்டு ஓடியது. எங்கள் கவனம் காளையின் மீது இருந்தமையால் பின்புறம் உட்கார்ந்திருந்த கிருஷ்ண சாமி ரெட்டியாரைக் கவனிக்கவில்லை. வண்டி சென்ற வேகத்தில் எப்படியோ கீழே விழுந்து விட்டார். 50 அடி சென்றதும் விழுந்தது தெரிந்தது. விழுந்த வேகத்தின் அதிர்ச்சியில் ஒரு காலின் முழங்கால் எலும்பு முறிந்து விட்டது. எல்லோரும் துக்கத்தில் ஆழ்ந்தோம். 'பாவம், வீட்டில் இருந்திருக்கலாம். தானே கிணற்றைக் காட்டி நிலைமையை விளக்கலாம் என்றும், புதுச் சொத்து பற்றி விளக்கலாம் என்று நினைத்து வந்தவருக்கு இந்தக் கதி நேர்ந்து விட்டதே! ஏற்கெனவே இளம்பிள்ளை வாதத்தால் தாக்குண்டிருந்த காலுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டதே' என்று மிகமிக வருந்தினேன். மேலும், சிக்க லாகாமால் எனக்குத் தெரிந்த அளவு முதலுதவி செய்து எலும்புகள் நழுவாமல் நன்கு கட்டி விட்டேன்.

வேறோர் இரட்டை மாட்டு வண்டிக்கு ஏற்பாடு செய்து சுமார் ஆறு கல் தொலைவிலுள்ள ஈச்சம்பட்டிக்கு இவரைக் கொண்டு சென்றேன். மாலை நான்கு மணிக்குப் போய்ச் சேர்ந்தோம். நுட மருத்துவர் காலைச் சோதித்து “சாதாரணமுறிவுதான், பயம் இல்லை’ என்று சொன்னதும், பாதுகாப்பாகச் கொணர்ந்தது சிறப்பு என்றும் கூறி எங்கள் கவலையைப் போக்கினார். அங்குத் தெரிந்த உறவினர் இல்லத்தில் தங்க ஏற்பாடு செய்யப் பெற்றது. 10 நாட்கள் அங்கு தங்கி இருக்க வேண்டும் என்று மருத்துவர் சொல்லி விட்டார். இரண்டு மாதம் நடக்கக் கூடாது என்றும் எச்சரித்தார். மூன்று மாதத்தில் நன்கு நடக்கும் நிலை வந்து