பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 நினைவுக் குமிழிகள்-2

தாமாக அரங்கசாமி ரெட்டியாரிடம் அமைந்தன. பள்ளியில் நடைபெறும் எல்லா நிகழ்ச்சிகட்கும் தவறாமல் வருபவர் இவர் ஒருவரே. பனமுறை மாணவர் கூட்டத்தில் பேசியும் பன்னி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு எனக்கு உறுதுணையாக இருந்து வந்தவர்.

இவரது இல்வாழ்க்கையை இறைவன் சரியாக அமைக்க வில்லை. செந்தாரப்பட்டியில் நல்ல குடும்பத்தில் பிறந்த பெண்ணைத் தம் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் குடும்ப வாழ்க்கையைத் தொடங்கினார். ஆறு, ஏழு ஆண்டுகள்தாம் இவருடைய இல்வாழ்க்கை சீரும் சிறப்புமாக நடைபெற்றது: தசரதனுக்கு நான்கு குமாரர்கள் தோன்றியதுபோல், இவருக்கும் நான்கு திருக்குமாரர்கள் தோன் றினார்கள். துணைவியார் திருநாட்டை அலங்கரித்து விட்டார்கள் இந்த நான்கு பிள்ளைகளும் அன்னையின் அரவணைப் பின்றி மாணாக்கர் விடுதியிலேயே தங்கிக் கல்விக்கற்க நேர்த்தது. விடுமுறையில்தான் தாயைப்பெற்ற பாட்டியுடன் திருச்சியில் தங்குவார்கள். இரண்டாவது தாரமாக ஒரு பெண்ணை மணக்க வாய்ப்பு இருந்தும் பிள்ளைகளின் நலனுக்காக மாணி வாழ்க்கையை மேற்கொண்டு வாழ் நாளைப் போக்கினார். இஃது ஒர் ஒப்பற்ற தியாகம்.

மாணவராக இருந்தபோதே நானும் கல்லூரித் தோழன் என்ற முறையில் மிக நெருக்கமாகப் பழகியுள்ளேன். நேர்மை யுடன் நடந்து கொள்வார். அடிக்கடி கோபப்படுவார்: அந்தக் கோபம் எதிரிகட்கு நன்மை பயப்பதாகவே இருக்கும். உண்மையைப் புரிந்து கொள்ளாதபோது இந்தக் கோபம் தோன்றும். பின்னர் அவரே அன்புடன் அவர்களை அணைத்துக் கொள்வார். இவருடன் நெருங்கிப் பழகும் அனைவரும் இவர் கோபத்தைப் பொருட்படுத்தமாட்டார்

கள்: அஃது அன்பின் விளைவாக எழுந்த கோபம் என்று கருதுவார்கள், -