பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளியில் சிறப்புச் சொற்பொழிவுகள் 183

அடையவேண்டும் என்ற கருத்தைக் கருவாக வைத்துக் க்ொண்டு இலக்கியங்களிலிருந்து பல எடுத்துக்காட்டுகள் தந்து இலக்கிய இன்பத்தை ஊட்டினார். ஊர்ப்பெரு மக்களும், சுற்றுப்புற ஊர்களிலிருந்து சிலரும் இவர் பேச்சைக் கேட்க வந்திருந்தனர்.

அக்காலத்தில் யான் புலவர் (வித்துவான்) தேர்வுக்குப் படித்துத் தனிப்பட்ட முறையில் தேர்வு எழுத முயன்று கொண்டிருந்தேன். தொல்காப்பிய சேனாவரையம் (சொல்) பாடமாக இருந்தது. இதில் ஏற்படும் ஐயங்களை அகற்றிக் கொள்ளும் பொருட்டு வார விடுமுறை நாட்களில் அடிக்கடித் திருவையாறு போய்வந்து கொண்டிருந்தேன். சேனா வரையம் பாடம் சொல்லுவதில் பெரும்புகழ் பெற்றிருந் தவர் பு. ரா. புருடோத்தம நாயுடு அவர்கள், இந்தச் சமயத் தில்தான் இலக்குவனார் தொடர்பு ஏற்பட்டது. எனக்குத் தன் இல்லத்தில் அருமையான விருந்தும் அளித்தார். அப் போதுதான் துறையூரில் வந்து பேசுமாறு அழைத்தேன்; அவரும் ஒப்புக்கொண்டு துறையூர் வந்து சிறந்த சொற்பொழிவாற்றிப் பெரும்புகழ் நிறுத்தித் திருவையாறு திரும்பினார்.

திரு நாயுடு அவர்கள் தொல்காப்பியத்தில் எனக்கு ஏற்பட்ட பல ஐயங்களை (மாணவன் என்ற முறையில் எழுந்த ஐயங்கள்) அகற்றிய முறை இன்றும் என் நினைவில்

பசுமையாகவே உள்ளது. நன்னூலில் பாடம் சொல்லும்

முறையைப் பவணந்தியார்,

ஈதல் இயல்பே இயம்பும் காலை

உரைக்கப் படும்பொருள் உள்ளத் தமைத்து விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து

s