பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 நினைவுக் குமிழிகள்-2

யைத் தொடங்கியதாக நினைவு. சிறிது காலம் வாரந்தோறும் இ.ஆர். உயர்நிலைப் பள்ளியில் நிகழ்த்திய கீதைப் பேருரை வும் சிறிது காலம் திருச்சி மலைக்கோட்டை நூற்றுக்கால் மண்டபத்தில் தாயுமான அடிகளின் பாடல் விளக்கமும் அடிகளை மக்கட்கு நன்முறையில் அடிமைப்படுத்தின.

அடிகளார் கோவை மாவட்டத் ைஇச் சேர்ந்தவர். திரு. சி. சுப்பிரமணியத்தின் சிற்றப்பா. மாநிலக்கல்லூரியில் இளங்களை வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது மேனாட்டு முறையில் உடுத்திக் கொண்டிருப்பவராம்: பழக்க வழக்கங்களும் மேனாட்டு பாணியிலேயே அமைந்திருந்தன. வாம். ஒருசமயம் கல்கத்தா இராமகிருஷ்ண மடத்திலிருந்து வந்த துறவியொருவரின் சொற்பொழிவைக் கேட்டு, மனம் மாறி, கல்வியையும் நடுவிலேயே விட்டுத் துறவுக் கோலத்தை மேற்கொண்டதாகச் சொல்வார்கள். கல்கத்தாவில் இருந்த போது இவருடைய பாட்டனார் நோய்வாய்ப்பட்டு இறக்கும் நிலையில் இருப்பதைத் தெரிவித்தார்களாம். இவர் துறவிக்கு எந்தவித பந்த பாசமும் இல்லையென்று சொல்லிவிட்டுப் பாட்டனாரைப் பார்க்க வரவில்லையாம்.

இவர் திருப்பராய்ந்துறையில் இராமகிருஷ்ண தபோ வனத்தையும், விவேகாநந்த வித்தியாவனத்தையும் நிறுவியது திருச்சி மாவட்ட மக்கள் செய்த தவப்பயன். திருப்பராய்த் துறை சம்பந்தர் (1.135), நாவுக்கரசர் (5. 30) இவர்களின் பாடல் பெற்ற தலம். அகண்டகாவிரியின் தென்கரையில் இயற்கைச் சூழலில் அமைந்த அற்புதமான இடம். இருப்பூர்தி வழியில் அமைந்த இடம். தொடக்கக் காலத்தில் எலமனுார் நிலையத்தில் இறங்கி 2 டர் லாங் நடந்து வர வேண்டிய நிலை. பின்னர் திருப்பராய்த்துறையே இருப்பூர்தி வண்டிகள் நிற்கும் இடமாயிற்று. எல்லாம் அடிகளாரின் திருப்பணியேயாகும்.