பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று மாநாடுகள் 221

பக்தர் விருந்தோம்புபவராக இருந்தால் இம்மாநாடு இங்கு நடைபெற்றது. அக்காலத்தில் கல்வியமைச்சராக இருந்தவர் திரு. தி.சு. அவிநாசிலிங்கம் செட்டியார் அவர்கள், நேர்மக்ை குப் பேர் போனவர்கள். தாமே பல பள்ளிகளடங்கிய ஒரு பெரிய நிறுவனத்தின் இயக்குநராக இருந்தமையால் ஆசிரியர் களின் குறைகளையும் பள்ளிகளின் அவல நிலையையும் நன்கு அறிந்தவர்.

துறையூர் ஆசிரியர் கூட்டிணைப்பு மாநாடு ஒன்றைத் திண்ணனூரில் காங்கிரஸ் மாநாடு நடைபெறும் அன்றே கூட்ட நினைத்தது துறையூர் ஆசிரியர் கூட்டு இணைப்பு. மாநாடு நடத்துவது என்றால் எவ்வளவு சிரமம் என்பதை மாநாட்டை நடத்திப் பார்ப்பவர்கட்குத்தான் தெரியும். இந்த மாநாட்டுத் தலைவராக இருப்பதற்கு பேராசிரியர் A, இராமய்யர் ஒப்புக் கொண்டார்; அடியேன் செயலாள ராகப் பணியாற்றினேன். 700க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கூடும் மாநாடு அது. துறையூரிலிருந்து புறப்படும் ஆசிரியர்க்கு திண்ணனூர் வரையிலும் இரண்டு பேருந்துகள் போவதும் வருவதுமாக இருந்தன. திண்ணனுாருக்கு அருகிலும் சுற்றிலும் உள்ள ஆசிரியர்கள் அவரவர்களே போக்குவரத் துக்கு ஏற்பாடுகள் செய்து கொண்டனர்.

ஓர் இடத்தை அன்பாகப் பிடித்து 700க்கு மேற்பட்ட வர்க்கு காலையில் சிற்றுண்டி காஃபி, மதிய உணவு, மாலை யில் சிற்றுண்டி காஃபிக்கு சமையல் ஆட்களை நியமித்து ஏற்பாடுகள் செய்யப்பெற்றன. அவசரமாக அங்கும் இங்கும் சென்று வருவதற்கு ஒரு வாடகைக் காரும் தயராக வைத் திருந்தோம். காலை எட்டு மணியிலிருந்து மாநாட்டுக்கு எழுந்தருளி அரைமணி நேரம் இருக்குமாறு கல்வி யமைச்சரைக் கேட்க முயன்றேன். பிற்பகல் 2 மணி வரை அவரைப் பார்க்கவே அநுமதி தர மறுத்தனர். எங்கும் கதர்