பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23? நினைவுக் குமிழிகள்-2

உடை, கதர்குல்லாய் அணிந்த கூட்டம் திரண்டிருந்தது. அக் காலத்தில் திருச்சி மாவட்டக் கல்வி அதிகாரியாக் இருந்த திரு. அப்பர் சுந்தர முதலியாரும் அமைச்சரைப் பார்க்கத் திண்டாடிக் கொண்டிருந்ததைக் கண்டேன்.

புதிதாகச் சுதந்திரம் பெற்ற நாடாதலால் காங்கிரஸ் காரர்கள் சீதையைக் கண்டறிந்த அநுமன் வந்தபிறகு வாணரங்கள் மதுவனத்தில் புகுந்து அட்டகாசம் செய்பவர் களைப் போல் காணப்பட்டனர். காங்கிரஸ் தொண்டர் களிடம் கூட ஆணவம் தலைக்கேறி நின்றது. பணிவோ பண் பாடோ அவர்களிடம் காணப்பெறவில்லை. பதினெட்டு ரூபாய்க்கும் இருபது ரூபாய்க்குமான மாத ஊதியத்தில் பணி யாற்றுபவர்கள் தாமே என்று எண்ணியது அவர்கள் பேச்சில் தொனித்தது. . .

எல்லாரும் ஒர்குலம் எல்லாரும் ஓரினம் - எல்லோரும் இந்தியா மக்கள்

எல்லோரும் ஒர்நிறை எல்லாரும் ஓர்விலை

எல்லாரும் இந்நாட்டு மன்னர்-நாம் எல்லாரும் இந்நாட்டு மன்னர்-ஆம் எல்லாரும் இந்நாட்டு மன்னர்.” என்ற பாடலில் எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்ற வரியின் கருத்தைத் தாம் மட்டிலும் தான்’ என்ற கருதிக் கொண்டிருந்த ஆணவம் தொனித்தது. - "எல்லாரும்’ என்பதில் ஆசிரியர்களும் அடங்குவர் என்பது அவர் மதியில் ஒளிரவில்லை. காரணம், தாங்கள் தாம் சுதந்திரம் வாங்கித்

* - - • ம பேசாத பேச்சாகத் தொனித்தது. தாங்கள்தாம் மன்னர்கள் என்று எண்ணிக் கொள்ளட்டும். அதைப் பட்டிமன்றம் அமைத்து மறுக்கவில்லை. ஆசிரியர்

2. பா. க பாரத சமுதாயம்-4.