பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 நினைவுக் குமிழிகள்-2

'அவினாசி லிங்கம் வாழ்க என்று முழக்கமிட்டு ஆசிரியர் மாநாடு வழியனுப்பி வைத்தது. மறுநாள் என் சொந்த ஊராகிய கோட்டாத்துரர் சென்றபோது மாமன் முறை யிலுள்ள பெரியாரொருவர் என்ன மாப்பிள்ளை, நீயும் மத்திரியும் கட்டிப் புரண்டிர்களாமே என்று அன்புடன் பேசினார். ஆம், மாமா, நாங்கள் இருவருமே கல்வித் தொண்டர்கள்: தொண்டர்களிடையே வேறுபர்டில்லை' என்று அமைதியாகவும் மரியாதையாகவும் மறுமொழி கூறினேன். என் வாழ்வில் பணிவும் மரியாதையும் இறைவனின் உபதேச மொழிகள் என்றே கருதிக் காலம் கழிக்கின்றேன்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் யாவரும் சிவப்புத் துணியில் கறுப்பு மையினால் ஆதரவு கோரும் ஆசிரியர்கள் என்று அச்சிடப்பெற்ற சின்னத்தை அணிந்திருந்தனர். இதைக் கண்ணுற்ற சில காங்கிரஸ்காரர் கள் ஆசிரியர்கள் யாவரும் பொதுவுடைமை வாதிகளோ? என்று ஐயப்பட்டதாக அறிந்தேன். எந்தவிதக் கட்சி வேறு பாடின்றி நாங்கள் சின்னத்தைத் தயாரித்தது கடுகுள்ளம் படைத்தவர்கட்கு எங்ங்ணம் புலப்படப் போகிறது? என்று எண்ணி வாளா இருந்து விட்டேன். சிலசமயம் நூலாசிரி யரின் கருத்தையறியாது உரையாசிரியர்கள் தத்தமக்குத் தோன்றியவாறு - தம் கொள்கையை நிலைநாட்டும் போக்கில்-உரை எழுதியிருப்பதை நினைத்துக் கொண்டேன்.

- . குமிழி -93 29. மாவட்டக் கல்வியதிகாரிகள்

இiன் துறையூரில் பணியாற்றிய காலத்தில் (ஒன்பது

ஆண்டுகள்) ஐந்து மாவட்டக் கல்வி அதிகாரிகளிடம் நெருங்கிப் பழக வேண்டி நேரிட்டது. அந்தக் காலத்தில்