பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“4() நினைவுக் குமிழிகள்-2

டாக்டர் நாராயண அய்யர் மடக்க முடியாதிருதந் கையை மிக்க பலத்துடன் நிமிர்த்தினார். பையன் துடிதுடித்துக் கதறியது இதனை எழுதும்போதும் (45 ஆண்டுகட்குப் பிறகு) கண்ணில் நீர் வடிகின்றது. அவர் சிகிச்சை செய்யும்போதுதான் அவர் இதில் ஏதும் அறியாத வர் என்பது புரிந்தது. அவர் புலங் கொண்டு நிமிர்த்தியதில் பிரதம இாத்தக் குழாய் அறுபட்டிருக்க வேண்டும் என்று என் மனம் எண்ணியது. பின்னர் உறுதிப்பட்டது. சிறிய கட்டுப் போட்டு அனுப்பினார். ஏதோ திரவம் தந்து கட்டின் மீது ஈரங்காயாமல் ஊற்றிக் கொண்டிருக்கு மாறு கூறி அனுப்பினார். அப்போதே காம் செய்தது தவறு என்பதை அவர் உள்மனம் உணர்ந்திருக்க வேண்டும். பிளாஸ்டர் ஆப் பாரிஸ் (பாரிஸ் காரை) போட்டோ மூங்கில் சிம்புகள் வைத்தோ கட்டாதது என்னைச் சிந்திக்க வைத்தது. வீட்டிற்கு வந்த பிறகு பையன் வலியால் துடிதுடித்து அழுதது என்னால் சகிக்க முடியவில்லை. மறுநாள் ஈச்சம் பட்டிக்கு ஆள் அலுப்பி நுடமருத்துவரையே கூட்டிவந்து பார்க்கச் செய்தேன். மருத்துவமனையில் என்ன நடந்தது? என்பது அவருக்கு எப்படித் தெரியும்? டாக்டர் கட்டிய கட்டை அவிழ்த்துவிட்டு மருந்தெண்ணெய் தடவி மூங்கில் சிம்புகள் வைத்துக் கட்டினார்: "எலும்பு முறிவு ஏற்பட வில்லை; மூட்டுப் பிசகுதான் இது என்று சொல்லி மறுநாள் வருவதாக விடைபெற்றார். அன்று மாலை பையனுக்கு பலமான சுரங்கண்டது. வெப்பமானி தெறித்து விடுமோ என்று அஞ்சும் அளவுக்கு அதிக வெப்பம். பையனுக்கு ஜன்னி கண்டு உளறத் தொடங்கிவிட்டான். கையின் முன்பகுதி யில் நீல நிறம் தோன்றிவிட்டது. இரத்த வோட்டம் அப்பகுதி பில் நின்றதோ என்ற ஐயம் ஏற்பட்டது, திருச்சி சென்றபின் உறுதிப் பட்டது. பையனைப் பார்த்து "நான் யார்?' என்று கேட்டேன். "மாமா' என்று விடை வரும்