பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24.6% நினைவுக் குமிழிகள்-2

ാബ:- "

கவனித்துக் கொண்டனர். ஆறு அணிகட்கும் தங்கும் இடங் களைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுதல், தாம் தூய்மை யாக இருந்தல், வரிசையாகப் போய்வருதல், பேச்சு அதிக மின்றி செயற்படுதல் போன்றவற்றில் போட்டி ஏற்படுத்தி அணிகட்குப் பரிசுகள் வழங்குதல் போன்ற செயல்களை ஆசிரியர்கள் கவனித்துக் கொண்டனர். சமூக வாழ்க்கை ஒழுங்காக நடைபெறுதல் என்பதுதான் குடிமைப் பயிற்சியின் (Citizenship Training) & sóláGassrair.

ஒவ்வொரு நாளும் மாணவர்கள் காலை 9 மணிக்குள் குளித்து உணவை முடித்துக் கொண்டு தயாராக இருக்க வேண்டும். ஒவ்வொரு அணியையும் வரிசையாக நடத்திக் கொண்டு வந்து நிறுத்துதல் அணித் தலைவரின் பொறுப்பு. எல்வா அணிகளும் ஒழுங்காக நிறுத்தப் பெற்றுள்ளனவா என்பதைச் சரிபார்த்தல் பள்ளி மாணவத் தலைவரின் பொறுப்பு. எல்லாம் சரியாக உள்ளன என்ற செய்தியை இவர் உடற்பயிற்சி ஆசிரியருக்கு அறிவிப்பார். பிறகு தேசியக் கொடியேற்றம் நடைபெறும். தொடியேற்றும் சிறப்பான பணியை திரு S. R நாகரெட்டியார் ஏற்றுக் கொண்டார். கொடியேற்றத்திற்குப் பிறகு நாட்டு வாழ்த்து (ஜன கண மன) பாடப்பெறும்; சேர்ந்து பாடவேண்டும். இம்மாதிரி ஒழுங்கு முறைகளைக் கற்றுக்கொடுப்பதுதான் குடிமைப் பயிற்சி முகாமின் பணியாக இருந்தது. மாணாக்கர் கன் ஆசிரியர்களுடனும், ஊர்ப்பெரியவர்களுடனும், பொது வாக எல்லோருடனும் பணிவுடனும் மரியாதையுடனும் பழகுதல் வேண்டும் என்பதும் கற்றுக் கொடுக்கப்பெற்றது; நாட்டுப்பற்றும் ஊட்டப் பெற்றது.

அணிகள் நடந்து கொள்ளும் முறைகளை உடற்பயிற்சி ஆசிரியர் அணித் தலைவர்கட்கும், பள்ளி மாணவர் தலைவருக்கும் அறிவிப்பார். இவர்கள் மற்றவர்கட்கு அறிவிப்பார்கள். ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொருவரும்