பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 நினைவுக் குமிழிகள்-2

(குடும்பம் என்றாலும் பொருந்தும் பள்ளியையே என் குடும்பம்போல் பாவித்ததால்).

பசலுணவு முடிந்ததும் ஒய்வு. அவரவர் விருப்பப்படிச் சுற்றலாம் என்ற 'உரிமம் (License) தரப் பெற்றது. மாலை 4மணிக்கு எல்லோருக்கும் காஃபி வழங்கப் பெற்றது. அக்கம் பக்கத்தில் கிடைத்த விறகைக் கொண்டு மிக எளிதாக காஃபி தயாரிக்கப் பெற்றது. 4 மணிக்கு ஊர் திரும்பினோம். ஐந்து மணிக்கு திரு. நாக ரெட்டியாரிடம் விடைபெற்றுக் கொண்டு கொப்பம்பட்டி வந்தோம். ஆத்தூரிலிருந்து துறையூர் போகும் பேருந்துகளில் மாணாக்கர்களைப் பாதுகாப்பாக ஆசிரிய ஒருவர் பொறுப்பில் அனுப்பி வைத்து இரவு எட்டு மணி சுமாருக்கு நானும் ஒன்றிரண்டு ஆசிரியர் களும் பேருந்து ஏறி வீடு வந்து சேர்ந்தோம். இந்த முகாம் இன்னும் என் நினைவில் பசுமையாகவே உள்ளது. என் வாழ்நாள் உள்ள வரை இஃது என் மனத்தை விட்டு நீங்காது. எங்கள் பள்ளித் துரைமார்கள் எங்கே? திரு. நாகரெட்டியார் எங்கே? முன்னவர்களின் பிசுநாறித்தனத்திற்கும் பின்னவரின் வள்ளல் தன்மைக்கும் ஏணி வைத்தும் ஏற முடியாது என்று என் மனம் இன்றும் எண்ணுகின்றது.

திரு. நாகரெட்டியார் இன்றில்லை. இரண்டாண்டுகட்கு முன்னர் (1987) திருநாடு அலங்கரித்து விட்டார். "தன் புகழ்நிறீஇத் தாம் மாய்ந்த பெரியோர்களின் பட்டியலில் சேர்ந்து விட்டார். நித்தியகுரிசளுடன் சேர்ந்து கொண்டார் என்று என் மனம் எண்ணுகின்றது; எண்ணி எண்ணிக் களிக்கின்றது.

குமிழி-96

32. திரு. R. கிருட்டிணசாமிரெட்டியார்(R.K)

சிற்றுப் படித்தவர்களால் சிதம்பர விலாஸ் ஆர். கே. (R. K.) என்றும், எல்லோராலும் சிதம்பர விலாஸ் 'தம்பு'