பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 நினைவுக் குமிழிகள்-2

துட்பங்களையும் அதன் நெளிவு சுழிவுகளையும் தெளிவுறத் தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் கிடைத்தன. இவற்றை மேலும் சீர்திருத்தினார். மோட்டார் சம்பந்தமான சட்ட திட்டங்களையெல்லாம் நன்கு தெரிந்து கொண்டார். எழுத்தெண்ணிக் கற்றுக் கொண்டார் என்று கூறினும் அது மிகையன்று. இக்காலத்தில் இவர்தம் புகழ் எங்கும் பரவியது.

மோட்டார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்திலும் பிறதுறை அதிகாரிகளிடத்திலும் செல்வாக்குடனும் பெரு மதிப்புடனும் திகழ்ந்தார். ஆங்கிலத்தில் சரளமாக

உரையாடும் திறனை வளர்த்துக் கொண்டார். பட்டதாரிகள் கூட இவர் முன் சற்றுத் தாழ்ந்து போகத்தான் வேண்டும் என்ற அளவுக்கு இவர்தம் திறமை 'மிளிர்ந்தது”.

இந்த உலகில் ஒருவர் நன்கு வாழ்ந்தால் அதனைக் கண்டு சிலர் பொறாமைப்படுவர்; நிலையினின்றும் தாழ்ந்து

போனால் எள்ளி நகையாடுவர். இஃது உலகியற்கை. இத்தகைய கயவர்களை வள்ளுவத்தாலும் தகர்த்தெறிய முடி:ாது. வள்ளுவம்தான் அண்மைக் காலத்தில்

விளம்பரப் பொருளாக மாறி வருகின்றதே. வாணிகத்தில் மருத்துவத்தில் வக்கீல் தொழிலில் ஏன் ஆசிரியத்தொழிலில் கூட-பொறாமை எங்கும் தாண்டவமாடுவதைக் காணலாம். துரியோதனின் பொறாமை பாரதப் பெரும் போருக்குக் காரணமாக அமைந்து இருந்ததை நாம் அறிவோம். அந்தப் பொறாமையின் காரணமாகத்தான் அவனும் அழிந்தான்; அவன் குலமும் அழிந்தது,

இதனால்தான் வள்ளுவப் பெருந்தகையும் ஒருவன் அழிவதற்கு அவனிடம் உள்ள பொறாமையே போதும் என்றார். இங்ங்னமே கிருட்டிணசாமி ரெட்டியாரின் செல்வாக்கையும் புகழையும் கண்டு அவருடன் கம்பெனியில் பணியாற்றிய கணக்கப் பிள்ளை மிகவும் பொறாமைப்