பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் 3

என்ன காரணத்தாலோ முதியவருடன்வாழவிரும்பாத அவர் துணைவியார் விசயவேங்கடாசலதுரை (நடுத்துரை) முத்து வேங்கடாசலதுரை (சின்னதுரை) என்ற இருமக்களுடன் அரண்மனையை விட்டு வெளியேறி திருச்சியில் வாழ்ந்து வந்தார். நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தனக்கு, தன் பேரனுக்கு, தன் மக்கள் இருவருக்கு-தலா ரூ. 250/-மாத வாழ்க்கை ஊதியமாகப் பெற்றுவந்தார். திருமகளை நீங்கி வந்த இருமக்களுக்கும் கலைமகளின் அருள் இருந்தமையால் அவர்கள் இளங்கலைப்பட்டங்கள் பெற்று, அதற்குமேல் சட்டக்கல்வியை முடித்துக்கொண்டு வழக்குரைஞர் தொழிலை மேற்கொண்டிருந்தனர். விசயவேங்கடாசலதுரை திருச்சியிலும், முத்துவேங்கடாசலதுரை துறையூரிலுமாக வழக்குரைஞராகப் பணியாற்றி வந்தனர்.

புதிதாகத் தொடங்கப்பெற்ற நடுநிலைப்பள்ளி (பெரு நிலக் கிழவர் நடுநிலைப்பள்ளி) இந்த வழக்குரைஞர்களின் பொறுப்பில் இயங்கி வந்தது. விசயவேங்கடாசலதுரை பள்ளியின் மேலாளராகவும், முத்துவேங்கடாசலதுரை அதன் தாளாளராகவும் (Correspondent) பணியாற்றிவந்தனர். இருவரும் தாம் மேற்கொண்ட தொழிலுக்கு அலங்கார புருஷர்களாக'- எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போய் வருகின்றார் என்ற உலகப் பழமொழிக்கு எடுத்துக்காட்டு களாக-இயங்கி வந்தவர்களாக என் அறிவுக்குப் புலனா யிற்று. ஏதாவது ஒன்றிரண்டு வழக்குகளை இவர்கள் கையாண்டிருக்கலாம். இவர்தம் தந்தையார் பெருநிலக் கிழவரின் ஒளிமங்கிக் கிடந்தாலும், இவர்கள் பெருநிலக் கிழவரின் மக்கள் என்ற ஒளியால் சமூகத்தில் ஒரளவு மதிப் புடன் திகழ்ந்து வந்தனர் என்று சொல்லலாம். தொழிலில் இவர்கள் இருவருக்குமே எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை; கணிசமான அளவுக்கு வருவாயும் இல்லை.