உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 நினைவுக் குமிழிகள்-2

இருவரும் நாணயத்திற்குப் பேர்போனவர்கள் என்று சமூகத்தினரால் போற்றப்பெற்றனர் என்பதற்கு எள்ளளவும் ஐயம் இல்லை.

இவர்கள் தலைமையில் யான் பணியாற்ற வந்தபோது எனக்குப் பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை என்ற இருவர் பெயர்களும் நினைவிற்கு வந்தது. கட்டபொம்மன் செந்நிற மேனியையுடையவராத லால் 'சிவத்தய்யா என்றும், ஊமைத்துரை கருநிறமாக இருந்தமையால் கருத்தய்யா என்றும் வழங்கி வந்ததாகப் படித்ததாக நினைவு. இந்த இரு துரைமார்களும் சிவப்பாக வும், கருப்பாகவும் இருந்தனர். பாஞ்சாலங்குறிச்சியைச் சார்ந்த இருவரும் பெருவீரர்கள்; மானமே உயிரினும் பெரிது என்ற கொள்கையையுடையவர்கள். ஆனால் எனக்குத் தலைவர்களாக அமைந்த பெரு நிலக்கிழவரின் மக்கள் இருவரும் பெருங்கோழைசுள்; எந்த முன்னேற்றப் பாதையிலும் துணிவாக இறங்கிச் செயற்பட அஞ்சுபவர்கள். ஆனால் இவர்கள் இருவரும் மானம் காத்து வாழ்ந்தவர்கள். நேர்மை தவறாது வாழ்ந்தவர்கள். இவர்களுள் மூத்தவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அதன் தொடக்கக் காலத்தில் தமிழ் இளங்கலைப் பட்டத் தேர்வில் முதல் நிலையில் முதல்வராகத் தேர்ந்தவர். தமிழில் பெரும் புலமை மிக்கவர். ஆனால் நான் பழகினவரையில் எந்தவிதமான புலமைக்கூறும் எனக்குப் புலனாகவில்லை. அறிவோர்க்கழகு கற்று உணர்ந்து அடங்கல்’ என்ற முதுமொழியின் உண்மை யையும் இவரிடம் என்னால் காண முடியவில்லை. ஆன்ற விந்து அடங்கிய சான்றோராகவும் இவர் எனக்குத் தென்பட வில்லை. இஃது பிறரை எடைபோடும் அறிவுக் கூர்மை’ என்னிடம் இல்லாமையோ அன்றி அவரிடம் புலமைக் கூர்மை இல்லாமை காரணமோ என்பது துறையூருக்கு