பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவுச் சிதறல்கள் 277

இவருக்குச் சில மாதங்களாகக் கண்ணொளி குன்றி வெளியில் நடமாட முடியாத நிலை.

X х X

பள்ளி அலுவலக வேலைக்கு ஒரு தட்டச்சு பொறி தேவைப்பட்டது. நிர்வாகம் வாங்கித் தருவதாக இல்லை. அலுவலகக் கடிதங்களுக்குப் பதில் எழுதுவதற்கு இது மிகவும் தேவைப்பட்டது. தேர்வுக் கட்டண வசூல் பணம் மீதி யிருந்தது. திர்வாகத்திற்கு ஒரு குறிப்பு எழுதி, இசைவு பெற்று 80). க்கு ரெமிங்டன் தட்டச்சு பொறி வாங்கப் பெற்றது, திரு. பிச்சுமணி அய்யருக்கு இயக்கத் தெரியு மாதலால், அவரைக் கொண்டு இதைப் பயன் படுத்த முடிந்தது. சரியான எழுத்தரைப் போடாத நிர்வாகம் தட்டச்சு இயக்கத் தெரியும் ஒருவரை நியமிக்கும் என்ற நம்பிக்கை எனக்குச் சிறிது கூட ஏற்படவில்லை. எருத்துப் புண் கஷ்டம் அதைக் கொத்தித் தின்னும் காக்கைக்கு எப்படித் தெரியும்?

சுதந்திரத்திற்குப் பிறகு குடிமைப் பயிற்சித் திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது. நாடோறும் பன்ன? தொடங்குமுன் இறைவழிபாட்டுப் பாடலை அனைவரும் கேட்கவும், நாட்டு வாழ்த்துப் பாடலை (ஜனகனமன) எல்லாருக்கும் சேர்ந்து பாட பயிற்சி தரவும் ஒரு வானொலிப் பெட்டி ஒரு பிக்அப் அமைப்பு தேவைப்பட்டன. நிர்வாகம் வாங்கித் தராது என்பது தெளிவு. புதிதாகச் சேரும் மாணவர்களிடம் 'வானொலி நிதி’க்கென்று ஒரு ரூபாய் தண்டுவதென்று முடிவு செய்து நிர்வாகத்திடம் இசைவு பெற்றேன்; அப்படி அச் சீட்டு வாங்கிய தொகைக்கு பற்றுச் சீட்டுகள் தரப் பெற்றன. பற்றுச் சீட்டுகளின் அடிக்கட்டை இருந்தால்தானே தண்டப்பட்ட பணத்திற்கு கணக்கு சரியாக வைத்துக் கொள்ளப் பெறும்? தவிர, பாடநூல்களை வைக்குமாறு வந்து கேட்கும் கம்பெனி யாரிடம் நன்கொடைவாங்கவும் முடிவுசெய்து ஆப்படி ரூ25/