பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 நினைவுக் குமிழிகள்-2

மறுநாள் காலையில் அதிகாலையில் நீராடி மீனாட்சி யம்மன் கோவிலுக்குப் போகத் தயாரானோம். காலை 6 மணிக்கு அன்னையின் சேவை கிடைத்தது. அன்னையைச் சேவித்த பிறகு 64 திருவிளையாடல்களை நிகழ்த்திய சோம சுந்தரக் கடவுளைச் சேவித்து அவருடைய திருவருளுக்குப் பாத்திரர்களானோம். திருக்கோயிலை வலம்வந்து வெளியில் வரும்போது பொற்றாமரைக் குளத்தைக் கண்டோம். சங்கப் பலகை மிதந்து பல நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்த குனம் அல்லவா? இதனைக் கண்டு களித்து திருக்கோயிலை விட்டு வெளிவந்து மேலைக் கோபுரவாயிலுக்கருகிலுள்ள ஒரு சிற்றுண்டி விடுதியில் உணவு கொண்டு நகரப் பேருந்து நிலையத்துக்கு வந்து நகரப் பேருந்துமூலம் திருப்பரங் குன்றத்திற்குச் சென்று முருகனைச் சேவித்தோம்.

திருமுருகாற்றுப்படை குறிப்பிடும் முருகனின் முதல் ஆற்றுப்படை வீடு இது. கடல் மட்டத்திற்குமேல் 1050 அடி உயரத்தில் ஒரு குன்றமாக அமைந்திருத்தலை நினைக் கின்றோம். சங்க காலத்திலேயே இது முருகனுடைய திருத் தலமாக விளங்கியது. இதனை மருதன் இளநாகனாரின்,

சூர்மருங் கறுத்த சுடரிலை நெடுவேல் சினமிகு முருகன் தன்பரங்குன்றம்'

(சூர் - சூரபன்மன்; சுடர் . ஒளி பொருந்தியர் என்ற பாடற் பகுதியாலும்,

கொடி நுடங்கு மறுகிற் கூடற் குடாஅது பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய ஒடியா விழவின் நெடியோன் குன்றம்"

அகம்-59

2. ു. 149.