பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தலப் பயணம்-நெல்லை 323

சிரீவைகுந்தத்திற்குச் செல்லுவதுபோன்ற எல்லையற்ற மகிழ்ச்சியை அடைகின்றோம். இதுவும் நவ திருப்பதிகளுள்" ஒன்று. திருக்கோயிலில் நுழைந்து சிலை வடிவிலுள்ள மூலவரை வணங்குகின்றோம். இவர் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுகம் கொண்டு சேவை சாதிக் கின்றார். தன்னந்தனியாகவே நிற்கின்றார். இவரைப் பற்றிய ஒர் இதிகாசம்: இதனை அர்ச்சகர் சொன்னது. சோமுகாசுரன் என்பவன் ஒர் அசுரன். அவன் நான்முகனிடத் திருந்த நான்கு திருமறைகளையும் பறித்துச் சென்று விடுகின்றான். அதனால் நான்முகன் வைகுந்தநாதனை நோக்கித் தவம் செய்கின்றான். நான்முகனது தவத்திற் கெழுந்தருளின எம்பெருமான் பெரிய திருவடியின்மீது ஏறி வந்து சோமுகாசுரனை வென்று நான்கு மறைகளையும் மீட்டு அவற்றை நான்முகனிடமே தந்து விடுகின்றான். நான்முகன் பொருட்டு அவசரமாக எழுந்தருளிய காரணத்தால் தேவி மார் இன்றித் தன்னந் தனியனாக வந்துள்ளார்.

திருச்செந்தூர் : சிரீவைகுண்டத்திலிருந்து பேருந்து மூலம் திருச்செந்துார் வருகின்றோம். கடற்கரைத் தலம், இத்தலத்தைத் திருமுருகாற்றுப் படை திருச்சீரலைவாய்' என்று சுட்டியுரைக்கும். வழக்கில் ‘செந்தில் என்றும் பெயர் வழங்குகின்றது. கடலலைகள் மோதும் கரையோரத் தில் உள்ள கோயிலாதலால் அலைவாய்' என்று பெயர். பெற்றது போலும். காலப் போக்கில் இப்பெயர் அக்கோயில் உள்ள ஊருக்கும் பெயராகி விட்டது.

4. கவதிருப்பதி : இவற்றுள் பொருநையாற்றின் தென் கரையிலிருப்பவை திருக்குருகூர், திருக்கோளுர், இதன் திருப்பேர்ை எ ன் ற, மூன்றுமாகும். சிரீவைகுண்ட்ம், நத்தம் என வழ்ங்கும் வர குண மங்கை, திருக்குளந்தை, திருப்புளிங்குடி, தொலை

விலி மங்கலம் (இரட்டைத் திருப்பதி) என்ற ஆறும் 喙@LD。 - .