பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தலப் பயணம்-கன்னியாகுமரி 329

சேகரம் செய்து அதனைப் பின்னர் ஓர் எண்ணெய்க் கிணற்றில் ஊ ற் றி விடுகின்றனர். நாம் கால்படி நல்லெண்ணெய் கொணர்ந்தால் அதனை இக்கிணற்றில் ஊற்றிவிட்டு அக்கிணற்றிலிருந்து கால்படி எண்ணெய் எடுத்துக் கொள்ளலாம், கோயில் ஆட்சியாளர்களிடம் சொன்னால் எடுத்துத் தருவார்கள், இந்த எண்ணெய் தீராத சருமநோய் (தொழுநோய்) முதலியவைகளை எல்லாம் தீர்க்கின்றது என்று மக்கள் நம்புகின்றனர், வட நாட்டுப் பக்தர்கள் இந்த எண்ணெயை, அதிகமாக வாங்கிச் செல்லுகின்றனர். இந்த எண்ணெயின் பெருமையைக் குறுமுனியாகிய அகத்தியரே தம்முடைய மருத்துவ முறையில் குறிப்பிட்டுள்ளாராம்.

கன்னியாகுமரி : வானமாமலை எம்பெருமானிடம் விடைபெற்றுக்கொண்டு நீலத்திரைக்கடல் ஒரத்திலே - நித்தம், தவம் செய்யும் குமரி எல்லையை நோக்கிப் புறப் படுகின்றோம். சரியான வெயிலில் பயணம். மாலை ஐந்து மணிக்குக் கன்னியாகுமரியை அடைகின்றது, பேருந்து. அங்குள்ள சத்திரமொன்றில் தங்க இடவசதி செய்து கொள்ளுகின்றோம். சாமான்களைச் சத்திரத்தின், ஓர் அறையில் வைத்துப் பூட்டிவிட்டுத் தம்புவையும் கூட்டிக் கொண்டு ஒரு சிற்றுண்டி விடுதியில் சிறிதளவு சிற்றுண்டியும் காஃபியும் உண்டு ஊரைச் சுற்றிப் பார்க்கின்றோம்.

இந்தியாவின் எல்லாப் பக்கங்களிலிருந்தும் பல்வேறு வித வண்ணக் கற்கள் வந்து இறங்கி இருந்தன. பல்வேறு இடங் களில் குடிசைகளைப் போட்டுக் கொண்டு கல்தச்சர்கள் கல் வேலை செய்து கொண்டிருந்ததைக் கண்டோம். விசாரித்ததில் விவேகாநந்தர் பாறையின்மீது எழுப்பப் பெறும் கோயில் திருப்பணிக்காக இக்கற்கள் தயாராகின்றன என்றார்கள். இவற்றையெல்லாம் சுற்றிப் பார்த்துக் ஆகொண்டே கடைத் தெருவையும் சுற்றினோம். எங்கும்