பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 நினைவுக் குமிழிகள்-2

இடம் விட்டுக் கழிப்பறைகள் அமைக்கப் பெற்றிருந்தன. இவற்றைத் தவிர வடப்புறப் பகுதியில் கீழ்க் கோடியில் சிறிய உள் அறையுடன் கூடிய ஒர் அறை இருந்தது. இது ஆசிரியர்கள் தங்கும் அறையாகப் பயன்பட்டது.

குடும்பத்திற்காக அமைந்த இரண்டு அறைகளுள் மேற் புறமாக இருந்த அறை என் இல்லமாகப் பயன் பட்டது. மற்றோர் அறையில் கூடம் சற்றுப் பெரிதாக அமைந்திருந்த தால் அது வகுப்பறையாகப் பயன் படுத்தப் பெற்றது. பள்ளியிலேயே என் இல்லம் அமைந்ததாலும், எனக்கு மக்கட்பேறு ஏற்படாததாலும் குடும்ப வேலைகள் அதிக மின்றி நான் துறையூரில் வாழ்ந்த ஒன்பதாண்டுக் காலமும் ஒருநாளில் 24 மணி நேரமும் பள்ளியின் முன்னேற்றத் திலேயே கழிந்தது. தூங்கும்போது கூடவா பள்ளி முன்னேற்றம்? என்று வினவலாம். ஆம்; உண்மைதான். வெறும் புகழ்ச்சி இல்லை. என் முழுக் கவனமும் பள்ளி யைப் பற்றியே இருந்ததால் காணும் கனவுகளும் பள்ளியைப் பற்றியேதான் இருக்கும். கட்டட மேற்பார்வை ஆடுகள மேற் பார்வை போன்றவைதான் கனவிலும் வரும். பள்ளித் தேவைக்காகப் பன்முறை சின்னதுரையைப் பார்த்துக் கெஞ்சி நிற்கும் காட்சிகள் கனவிலும் வரும். ஆகவே, "24 மணி நேரமும் பள்ளி முன்னேற்றத்திலேயே என் கவனம் சென்றது என்று நான் கூறுவதில் சிறிதும் மிகைபடக் கூறிய தாகாது. பின் வரும் குமிழிகளில் வெளிபடும் சில செய்தி களிலிருந்து இக் கருத்து தெளிவாகும்.

காலாண்டுத் தேர்வின்போது நான் பொட்டணம் (என் மாமனார் ஊர்; நாமக்கல் வட்டம், சேந்தமங்கலத்திற் கருகிலுள்ள ஒரு சிற்றுார்) சென்று என் மனைவியை இட்டுக் கொண்டுவந்து எனக்குரியதாகவுள்ள இல்லத்தில் குடியேறி