பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிக் குடும்பம் வைத்த இல்வாழ்க்கை 15

னேன். என் அன்னையார் கோட்டாத்துரிலிருந்து ஒரு சில தட்டுமுட்டுச் சாமான்களுடன் சிறிது அரிசி பருப்புடன் வந்து சேர்ந்தார்கள். இரண்டு வாரத்திற்குள் என் மாமனார் பொட்டணத்திலிருந்து ஓராண்டுக்குத் தேவையான அரிசி பருப்பு இதர மளிகை சாமான்கள் உட்பட ஒர் இரட்டை மாட்டுவண்டியில் வந்து சேர்ந்தார். கோட்டாத்துரிலிருந்து விறகு வந்தது. பாலுக்கு எப்படியோ ஏற்பாடு செய்து கொண்டேன். எந்தவிதக் கவலையுமின்றி வாழ்க்கை இனிதாக நடைபெற்றது. என் மாமனார் மேசை, நாற்காலி, ஸ்டூல், அலமாரி செய்து கொள்வதற்காகத் தம் மகளிடம் ரூ 100/- தந்துவிட்டுச் சென்றார். இஃது இக்காலத்திலுள்ளவர்கட்கு மிக்க குறைவாகத் தோன்றும். இதனைக் கொண்டு தோதகத்தி மரத்தாலான (Rose wood) ஒரு நாற்காலி கூட வாங்கமுடியாது.

சின்னதுரைக்கு வேண்டிய மரச்சாமான்களைச் செய்து கொண்டிருந்தார் ஒரு தச்சாச்சாரி. இவர் கிறித்தவ சமயத்தைத் தழுவியவர்; துறையூருக்கு மூன்றுகல் தொலைவி லுள்ள பெருமாள் பாளையத்தைச் சேர்ந்தவர். அந்தச் சிற்றுாரில் பாதிபேருக்குமேல் எல்லாச் சாதியாரிலுமே கிறித்தவ சமயத்தைத் தழுவியவர்கள். இவர்களுள் ரெட்டி சமூகத்தைச் சார்ந்த ஒரு சிலருக்கு இலங்கைத் தொடர்பு இருந்து வந்தது; இவர்கள் யாவரும் பெருஞ் செல்வர்களாய்த் திகழ்ந்தனர். ஒரு நாள் சின்னதுரை பங்களாவில் வேலை செய்து கொண்டிருந்த தச்சாச்சாரியைக் கூப்பிட்டு பீரோ: மேசை, நாற்காலி, ஸ்டுல்கள் செய்ய வேண்டும் என்றும் இவை தோதகத்தி மரத்தாலானவையாக இருக்க வேண்டும் என்றும் கூறினேன். பீரோ துணிகள் வைத்துக் கொள்வதற் கேற்றவாறு ஒற்றைக் கதவுடன் இருந்தால் போதுமென்றும் ஆனால் அதனுள் டிராயர் ஒன்று இருத்தல் வேண்டும் என்றும் சொன்னேன். எல்லாவற்றிற்கும் அளவுகளையும் தந்தேன். -