பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 நினைவுக் குமிழிகள்-2

நல்ல பாண்டுதாளில் (அளவு டெமி - ஒன்றுக்கு எட்டு) நான்கு பக்கமும் அழகாக வண்ண மையில் கோடுகளிட்டு, எழுதுவதற்கு ஏற்றவாறு இருக்குமாறு தாள்கள் தயாரிக்கப் பெற்றன. மாணாக்கர்கட்கு கவிதை, கட்டுரை. விகடத் துணுக்கு, சிறுகதைகள், சில நிகழ்ச்சிகள் - இவை கையெழுத்து மலருக்கு ஏற்கப்படும் என்று அறிவிப்பு செய்த தில் ஏராளமான மாணவர்களின் எழுத்துகள் வந்து குவிந்தன. தமிழாசிரியர்கள், குறிப்பாக நற்றிறம் படைத்த வி.சி. கிருஷ்ணசாமி ரெட்டியாரின் மேற்பார்வையில் இவை பரிசீலிக்கப் பெற்று தேர்ந்தெடுக்கப்பெற்றன. தேர்ந் தெடுக்கப் பெற்றவற்றை நடை முதலியவற்றில் கை வைக்காமல் எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள், வாக்கியப் பிழைகளில் திருத்தம் செய்யப் பெற்றன. திருத்தமானவற்றை கவிதை, கட்டுரை, சிறுகதை, துணுக்கு கள் என்று வகைப்படுத்தி நன்கு அழகாக எழுதவல்ல மாணவர்களைக் கொண்டு எழுதப் பெற்றன. எழுதி முடிந்தவுடன் இவற்றை அச்சகத்தில் தந்து கட்டமைக்கப் பெற்றன. இதழ் அழகாக அமைந்தது. இளைஞர் அறிவுச் சுடர் என் திருநாமம் சூட்டப் பெற்றது. இரண்டாண்டு கள் கையெழுத்திலேயே இதழ் தயாரிக்கப் பெற்றன. இங்கனம் வாய்ப்புகள் தந்ததில் மாணாக்கர்களின் அருமை யான படைப்புகள் சுடர்விட்டுத் திகழ்வதைக் கண்டுதான் இப்பெயர் சூட்டப் பெற்றது.

1949, 1950 இதழ்கள் அச்சில் கொண்டு வரப்பெற்றன. மாணாக்கர்கள் வரையும் சில அழகான ஒவியங்கள் குறுப்புச் சித்திரங்கள் (Cartoons) போன்றவற்றையும் அச்சுக் கட்டைகள் (Blocks) தயாரிக்கப்பெற்று வெளியிடப் பெற்றன அட்டை மூவண்ணத்தில் தயாரிக்கப் பெற்.றதால் மலர் அழகுடனும் கவர்ச்சியுடனும் திகழ்ந்தது. இவற்றில் மாணாக்கர்கள் அருமையான கட்டுரைகள், சிறுகதைகள்,