பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்பாராத நிகழ்ச்சி 389

முதல்வரிடமிருந்து; மறுநாள் கடிதமும் வந்தது தமிழ்ப் பேராசிரியராக வந்து சேரும்படி கல்லூரி சூலை 5 நாள் திறக்கப் பெறுகின்றது என்ற குறிப்பும் கடிதத்திலிருந்து தெரிந்து கொண்டேன். இது வியப்பினும் வியப்பாக இருந்தது. கல்லூரிப் பணியை விரும்பி விண்ணப்பித்தாலும் கிடைப்பதில்லை. அப்பணி கனவு நிலையிலேயே இருந்தது. விண்ணப்பம் போடவும் துணிவு இல்லை பரிந்துதைப் பதற்குத் தக்கார் இல்லாதலால். ஆயினும் இந்தக் கல்லூரிக் காக வந்த விளம்பரத்தைப் பார்க்காததால், விண்ணப்பம் போடவும் இல்லை. பள்ளி வாழ்க்கையில் நேரிட்ட குழப்பத்தால் மன அமைதியின்றி அங்கும் இங்குமாக அலைந்து திரிந்து கொண்டிருந்தமையால் இந்த விளம்பரம் என் கண்ணில் படவில்லை.

இறையருளை நினைந்து காரைக்குடிப் பணிகை; ஏற்றுக்கொள்ள முடிவு செய்தேன்.

கடமைதான் ஏது? கரிமுகனே வையத்து. இடம்நீ அருள்செய்தாய், எங்கள்-உடமைகளும், இன்பங் களுமெல்லாம் ஈந்தாய்நீ யாங்களுனக்(கு) என்புரிவோம் கைம்மா(று) இயம்பு" என்று கணபதியின் அருளை எண்ணி எண்ணி மகிழ்ந்தேன். கம்பன் திருநாள் காணப்போன எனக்குக் கச்சி ஏகம்பன் தன் மூத்த பிள்ளைமூலம் இங்கனம் அருள் புரிந்தான் போலும் என்று நினைந்து, -

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்து உருகி நில்லாப் பிழையும் நினையாப்

பிழையும்நின் அஞ்செழுத்தைச்

6. பா.க வி.நா.மி : 21