பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 நினைவுக் குமிழிகள்-2

தார். மகிழ்ச்சியுடன் வரவேற்றார். நல்ல வேளையாக வந்து சேர்ந்து என் வாக்கைக் காப்பாற்றினர்' என்று அன்புடன் பேசினார். அதன் பிறகு திருச்சூரிலிருந்து பேராசிரியர் ஐ. என். மேனன் முதல்வராகப் பணிஏற்றியிருப் பதையும் மறுநாள் அழகப்பா கல்லூரியிலிருந்து திரு. எஸ். திருவேங்கடாச்சாரி (விரிவுரையாளர்) பேராசிரியராகப் பணி ஏற்கப் போவதையும் கூறினார். மற்றும் ஆங்கிலம், கணிதம், அறிவியல், உளவியல் துறைகட்கு யார் யார் வருகின்றனர் என்பது மறுநாள் தான் தெரியும் என்றும் தெரிவித்தார்.

பின்னர், "எங்கள் விளம்பரத்திற்கு நூற்றுக் கணக்கான விண்ணப்பங்கள் வந்தன. தமிழ்ப் பேராசிரியர்கட்கு ஒரு விண்ணப்பம் கூட இல்லை. நீங்கள் விளம்பரத்தைப் பார்க்கவில்லையா? ஏன் விண்ணப்பம் போடவில்லை? திரு. அ. ச. ஞானசம்பந்தம் வேலூர் ஆரீஸ் கல்லூரியில் உள்ள திரு. யோகசுந்தரத்தைப் பரிந்துரைத்தார் (இடை நிலை வகுப்பு வரை உள்ள கல்லூரி). என்ன காரணத்தாலோ அவரை நியமிக்க என் மனம் ஒப்பவில்லை. டாக்டர் செட்டியார் அடுத்த ஆண்டு தமிழ்த் துறையை ஏற்படுத்த லாம் என்று சொன்னார். நான்தான் "நாம் தொடங்கும் போதே தமிழுக்கும் வகை செய்ய வேண்டும்’ என்று வற்புறுத்தினேன். 'விண்ணப்பமே இல்லாதபோது என்ன செய்வது? என்றார். "நான் எப்படியாவது தக்கவர் ஒருவரைக் கொணர்வேன்’ என்றேன். உடனே, "தமிழைப் பொறுத்தவரை உங்கள் பொறுப்பு என்று கூறி இந்த நியமனத்தை என் பொறுப்பில் விட்டார். எனக்கு உங்கள் நினைவுதான் வந்தது. நீங்கள் என்ன படித்துள்ளீர்கள் என்பது கூட எனக்குத் தெரியாது. பத்து ஆண்டுகள் தலைமையாசிரியராக இருந்திருக்க வேண்டும் என்பது