பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 - நினைவுக் குமிழிகள்-2

பள்ளி 1941 ஜூன் 4 தேதி தொடக்கப்பெற்றது. 1941-42 (மார்ச்சு முடிய) பள்ளி வரவு செலவுக் கணக்குகள் கல்வித் துறைக்கு அனுப்ப வேண்டும். எந்தப் பள்ளிக்குப் போனாலும் பொறுமையாக சொல்லித் தர மாட்டார்கள் என்பது நான் அறிந்த உண்மை; என் அநுபவமும் அதுதான். பல நாட்கள் யோசித்துக் காட்டுப்புத்துர் பெருநிலக்கிழவர் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் சுந்தரம் அய்யருக்கு எழுதினேன். அவரும் உதவுவதாக எழுதினார்; தினசரித் தண்டல் பதிவேடு, தண்டல் பேரேடு, மாத வரவு - செலவுக் கணக்குபற்றிய பதிவேடு, பற்றுச் சீட்டு அடிக்கட்டை ஆகியவற்றை எடுத்துக் கொண்டு வரும்படி ஆலோசனை கூறினார். நானும் இவற்றையெல்லாம் மூட்டைக்கட்டிக் கொண்டு மே மாதம் (1942) காட்டுப்புத்துர் சென்றேன்; மாணாக்கர்களின் தேர்வு அறிக்கை தயாரித்து அறிவிப்புப் பலகையில் ஒட்டி அதன் நகல் மாவட்டக் கல்வி அதிகாரிக்கு அனுப்பிய பிறகுதான் சென்றேன்.

அந்தத் தலைமையாசிரியர் உலகியல் நன்கு அறிந்தவர். அந்தச் சின்ன ஊரில் உணவு கொள்வதற்கும் தங்குவதற்கும் வசதிகள் குறைவாக இருந்தமையால் பெருநிலக் கிழவர் திரு K. C. சப்தரிஷி ரெட்டியாருக்கு என் வருகையைத் தெரிவித்துத் தங்குவதற்கும் உணவுக்கும் ஏற்பாடு செய்து விட்டார், இருந்தாலும் நானும் மரியாதைக்காக திரு சப்தரிஷி ரெட்டியாரைப் பார்த்தேன்; இரண்டாண்டுகட்கு முன்னர் திருச்சி திரு. நந்திரெட்டியாரின் பரிந்துரைக் கடிதங் கொண்டு அவரைப் பார்த்ததையும், அவரிடம் நடத்தை பற்றிய சான்றிதழ் பெற்றதையும் தெரிவித்துக் கொண்டேன். அவரும் நினைவு கூர்ந்து மகிழ்ச்சி தெரிவித்தார். ஒருநாள் மாலை காட்டுப்புத்தூரை அடைந்ததால், அன்றே இந்தக் கணக்கு வழக்குகளைத் திறமையாகப் பார்த்து வரும்