பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிர்வாகப் பொறுப்பை ஆற்றிய முறை 27

போட்டு வைத்திருப்பார். ஒவ்வொரு வகுப்பிற்கும் தனித் தனிக் காக்கித் துணியாலான பை உண்டு. முதல் பொழுது முடிவிற்குள் அலுவலக உதவியாள் (peon) முத்துசாமி என்பவர் வகுப்புதோறும் சென்று பணப்பையையும் தாளை யும் பெற்று வருவார். இரண்டாம் பொழுதில் ஒய்வாக இருக்கும் ஆசிரியர் வகுப்புவாரியாகப் பற்றுச் சீட்டுகளை எழுதுவார்; ஒவ்வொரு பையிலுள்ள தொகைக்குத் தாளில் உள்ள தொகைக்கும் ஒப்பிட்டுச் சரிபார்த்து கையெழுத்திட்டு விடுவார்; தண்டல் செய்த ஆசிரியரின் கையெழுத்தும் ஆதாளில் இருக்கும்.

பணத்தைச் சரியாகக் கணக்கிட்டுநான் வாங்கி வைத்துக் கொள்வேன். பகல் பன்னிரண்டரைக்குள் பணம் எண்ணப் பெற்று வங்கிக்குப் போகத் தயாராகி விடும். அன்று மாலைக்குள் ஒய்விலுள்ள ஆசிரியர்களைக் கொண்டு தினசரித் தண்டல் குறிப்பேட்டில் பற்றுச்சீட்டுகள் விவரப்படி பதியப் பெறும். P. முத்துசாமி என்னும் உதவியாள் எனக்குக் கிடைத்தது நான் செய்த தவப்பயன் என்று கருதுகின்றேன். பகல் பன்னிரண்டரை மணிக்குள் தண்டல் செய்த தொகையை 10, 5, 2, 1 ரூபாய் நோட்டுகளாக வகைப் படுத்தியும்; நாணயங்களை 1ரு. இரு iரு இரண்டணா, ஒர்.அணாவாகப் பிரித்துப் பொட்டலங்களாகியும் வங்கியில் செலுத்துவதற்குத் தயாராகி விடும். துறையூர் லட்சுமி விலாஸ் வங்கியில் சேமிப்புக் கணக்கு பள்ளிப் பெயரில் செலுத்தப் பெற்றாய் விடும். நானோ வேறு யாராவது ஒர் ஆசிரியரோ செலான் எழுதி விடுவோம். செலானின் அடிக் கட்டையும் தண்டல் குறிப்பேடும் தாளாளர் கையெழுத் திற்குப் போய்விடும். அன்றாடத் தண்டல் எப்படியும் பாங்கி யில் செலுத்தப் பெற்றாய் விடும். கையிருப்பு ஒன்றுமே இராது. - .