பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 நினைவுக் குமிழிகள்-2

சில்லறைச் செலவிற்காகத் தாளாளர் இசைவு பெற்று ரூ. 25). கையிருப்பாக இருந்தது. மாத இறுதியில் செலவு விவரங்களுடன் ஒரு பில் தயார் செய்யப் பெற்றுத் தாளாள ருக்கு அனுப்பப் பெறும். செலவுகளை அநுமதித்து அத் தொகைக்கு காசோலை தரப்பெறும். இதனால் ஒவ்வொரு மாதமும் முதல் நாளன்று ரூ. 25). கையிருப்பாகி விடும். தண்டலிலிருந்து எந்தவிதச் செலவும் செய்தல் கூடாது என்ற வரம்பை நானாக ஏற்படுத்திக் கொண்டேன். கையிருப்பாகப் பெருந்தொகை இருந்தால்தான் தவறான முறையில் கையாளப்பெறும்; கையாடவும் பெறும்; அதற்கு இடமே இருத்தல் கூடாது என்பது நானே மோத கொண்ட விதி. வாழ்க்கையில் ஒருவர் மேல் பழிசுமத்த வேண்டுமானால் ஒன்று பணம் கையாடல்: இரண்டு மகளிர் பால் கொள்ளும் நேசம். இந்த இரண்டையும் பொறுப்புள்ள ஒருவர் சமாளிக்கக் கூடுமானால் அவர் மனத்துய்மையுடன் வாழலாம். நல்லொழுக்கத்தைக் கடைப்பிடிக்கலாம். எந்த விரோதிகளாலும் வீண் பழி சுமத்துவதற்குக்கூட வாய்ப் பில்லாது போய்விடும். இளம்வயதில் பொறுப்புள்ள பதவியை எனக்கு நல்கிய இறைவன் தூய்மையாக இயங்கவும் நல்ல வழிகளைக் காட்டினான்; அவற்றில் நடந்து செல்லவும் மனவன்மையைக் கொடுத்தான். அந்த இறைவனின் தாள் களை நாள்தோறும் நினைந்து வழுத்துகின்றேன்; போற்று கின்றேன்.

மாத இறுதியில் மாத வரவு-செலவுக் கணக்குகளை மாத இறுதி நாளே தயாரித்துத் தாளாளர் கையெழுற்திற்கு என் கையெழுத்துடன் அனுப்பி விடுவேன். பல்வேறு வரவு விவரங்கள் இடப்பக்கமும் செலவு விவரங்களும் வலப்பக்கமு மாக இருக்கும். செலவுப் பக்கத்தில் வங்கியிருப்பும் ரூ 25/நிரந்தரக் கையிருப்பும் காட்டப் பெற்றிருக்கும். இந்தக் கணக்கை முடிக்கும்போது ஒரு சிறந்த கவிதையைப் படித்து